அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை

 
Published: Sunday , 15th April 2018 11:47:10 PM

Central regulatory agency gives green signal to kudankulam power production
விருதுநகரில் தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதாக வெளியான ஆடியோ பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்- அப்’பில் பரவியது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக இருப்பவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க மாணவிகளிடம் அவர் வலியுறுத்துவதாகவும், இதன் மூலம் பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசைகளையும் பேராசிரியர் தெரிவிக்கிறார்.

 கல்வியையும், நல் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய பேராசிரியரே இதுபோன்று பேசியிருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் இருக்கும் எந்த உயர் அதிகாரிகளுக்காக அவர் மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறினார் என்பது தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து அந்த பெண் பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பேரிசிரியர் நிர்மலாதேவி, தவறான நோக்கத்துடன் மாணவிகளிடம் பேசவில்லை என்றும் அவை சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.