கதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

 
Published: Monday , 16th April 2018 07:28:09 AM

Central regulatory agency gives green signal to kudankulam power production
ஜம்மு-காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாமாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கதுவா சிறுமி ஆசிபாவின் பெற்றோருக்கு பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி கதுவாவின் தந்தை, இந்த விசாரணையை அருகில் உள்ள சண்டிகருக்கு மாற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு விசாரணையின் போது போலீசார் எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என நீதிபதிகள் கேட்டு அறிந்து கொண்டனர். விசாரணையின் போக்கு சரியாக நடந்து கொண்டிருக்கிறது என ஏற்று கொண்டனர்.

இந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அவரது வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பாக பதிலளிக்க ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜம்மு-காஷ்மீர் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.