சிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி

 
Published: Tuesday , 17th April 2018 07:17:47 AM

Central regulatory agency gives green signal to kudankulam power production
காஷ்மீிர் மாநிலத்தில் சிறுமி ஆசிபா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டைதை நினைக்கும்போது மனதிற்கு கஷ்டமாக உள்ளது என நடிகர் விஜய் சேதுபதி தெவித்துள்ளார்.

இவங்களுக்கு துணை போகுவர்களை நினைக்கும்போது கோவம் அதிகமாக வருகிறது. பெண்களை மதிப்பதற்கு கற்று கொடுத்துள்ளோம் அதைபோல் குழந்தைகளை மதிக்கவும் கற்றுக் கொடுக்களும்போல, இதை படிச்சவர்கள் செய்யும்போதுதான் பெரிய கஷ்டமாக இருக்கிறது.

எல்லா வீடுகளிலும் பெண்கள் உள்ளனர், அம்மாவாக, சகோதரியாக, மனைவியாக, நண்பர்களாவும் இருக்கிறார்கள், இதற்குமேல் என்ன தனியா பாடம் எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை, இவ்வளவும் செய்துவிட்டு விளக்கம் வெறு கொடுக்கிறார்கள் அதை எற்றுக்கொள்ளவே முடியாது. நமக்கு வேலைவாய்ப்போ, தண்ணீர் பிரச்சனை, அடிப்படை பிரச்சனை என எதையும் தீர்க்கமாட்டார்கள்,

ஆனால் நாம் என்ன மதம், என்ன ஜாதி எதை கடைபிடிக்க வேண்டும் என்று பாடம் எடுப்பார்கள், இதில் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். இந்த குற்றம் செய்தவர்களுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது, ஆனால் தண்டனை கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.