மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு

 
Published: Tuesday , 17th April 2018 07:34:30 AM

Central regulatory agency gives green signal to kudankulam power production
நாட்டில் உள்ள பணப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், 500 ரூபாய் அச்சடிப்பது குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. அதன்பின் புதிய ரூ.2000, ரூ.200, ரூ.500 நோட்டுகள் அச்சடித்து ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடப்பட்டபின் பணப்பழக்கம் சீரடைந்தது.

இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம், பிஹார், தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே பணப்புழக்கம் குறைந்து வந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பல நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் இல்லாமல் காலியாகக் கிடக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, திடீரென, வழக்குத்துக்கு மாறான வகையில் பணத்தின் தேவை அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் போதுமான அளவு கரன்சி இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த திடீர் பணப்பற்றாக்குறையை சில நாட்களில் சரியாகும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் எஸ்.சி.கார்க் டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அளவை அதிகப்படுத்த இருக்கிறோம். இப்போது நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நோட்டுகள் ரூ.500 கோடி அச்சடிக்கிறோம். இதை அதிகப்படுத்தி, நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நோட்டுகளைஅச்சடிக்கும் அளவை 5 மடங்கு உயர்த்தப் போகிறோம். அடுத்த இருநாட்களில் ரூ.2,500 கோடி வங்கிகளுக்கு அனுப்ப இருக்கிறோம். இந்த மாதத்துக்குள் ரூ.70 ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடி வரையிலான 500 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, ஏப்ரல் 6-ம் தேதி வரை நாட்டில் பணப்புழக்கம் ரூ.18.17 லட்சம் கோடியாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஏறக்குறைய ரூ.5 லட்சம் கோடிக்கு ரூ.20 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.