கூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.

 
Published: Sunday , 8th July 2018 11:15:01 PM

Central regulatory agency gives green signal to kudankulam power production

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக உலக அளவில் நடத்திய நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற இந்திய மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனம் பணி வழங்கியுள்ளது.
கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களில் இயங்கி வருகிறது.  இதை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்தியா உட்பட உலகளவில் பல நாடுகளில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையில் 50 பேர் தேர்வாகி உள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்ற நேர்முக தேர்வில், பெங்களூருவைச் சேர்ந்த ஆதித்யா பாலிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டிற்கு 1 கோடியே 20 லட்சம் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவர், ஜூலை 16-ம் தேதி பணியில் சேர உள்ளார்.

கூகுள் நிறுவனம் நடத்திய தேர்வில் கலந்து கொண்ட 6 ஆயிரம் பேரில் 50 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் ஆதித்யா பாலிவாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ய