எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்

 
Published: Friday , 20th April 2018 06:48:31 AM

Central regulatory agency gives green signal to kudankulam power production
படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது என்றும், பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் கூறியிருக்கிறார்.


படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல்வேறு நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள். இதேபோல் நடந்து கொள்ளும் சினிமா பிரபலங்களின் பட்டியலை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், திரை உலகில் நடைபெறும் இதுபோன்ற வி‌ஷயங்கள் குறித்து ரம்யா நம்பீசன் அளித்த பேட்டி...

“சினிமா துறையில் நடைபெறும் சில மோசமான வி‌ஷயங்கள் பற்றி என்னைப்போன்ற நடிகைகளும், எனது தோழிகளும் சொன்னதை நான் மறுக்கப்போவது இல்லை.

 அதிர்ஷ்டவசமாக நான் அது போன்ற தொல்லைக்கு ஆளாகவில்லை. நான் என்ன செய்கிறேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன். எனக்கு ஏதாவது பிடிக்காவிட்டால் முடியாது என்று சொல்லிவிடுவேன்.


ஆனால், என் தோழிகள் இந்த பிரச்சினையை சந்தித்து இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது.

படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லையென்று நான் சொல்லவில்லை. ஆனால், எனக்கு அப்படி நடக்கவில்லை என்கிறேன்.

திரை உலகில் நடக்கும் இந்த பிரச்சினையை தீர்க்க இதுகுறித்து பேச வேண்டும். படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலும் உள்ளது. பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும்”.