tamilkurinji logo
 

தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்,tamil news india news

tamil,news,india,news


செய்திகள் >>> தமிழகம்

தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்

First Published : Wednesday , 6th December 2017 12:52:20 PM
Last Updated : Wednesday , 6th December 2017 12:52:20 PM


தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்,tamil news india news


சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 90). நோய்வாய்ப்பட்டு இருந்த இவர் 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.

இந்த நிலையில் ஒரு காலி இடத்தில் முதியவர் ஒருவர் பிணம் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது மகள் கமலாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கொன்று புதைக்கப்பட்ட பழனிசாமியின் மகள் கமலா அரிசிபாளையம் மாணிக்கம் தெருவில் உள்ள மஞ்சள் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

அவரது தந்தை பழனிசாமிக்கு வயதானதால் உடலில் புண்கள் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டு வந்தார். இதனை கமலா சரியாக கவனிக்கவில்லை. பழனிசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பள்ளப்பட்டியில் உள்ள கழிப்பிடம் அருகே படுத்துக் கொண்டு ஆங்காங்கு கிடைக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு வந்தார். சிலநேரங்களில் பசியால் மகளின் வீட்டிற்கும் செல்வார்.

இதனால் மன வேதனையடைந்த கமலா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். அவரை கருணை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்காக அவர் வேலைபார்க்கும் மில்லின் அருகே உள்ள கல்மாவு மில்லில் ஊழியராக வேலை பார்க்கும் சண்முகம் (45) என்பவரின் உதவியை நாடினார்.

தந்தை நோயால் அவதிப்படுவதை பார்க்க முடியாமல் தவித்து வருவதாக கமலா கூறினார். மேலும் அவரை கருணை கொலை செய்துவிடலாம் என்று நினைப்பதாகவும் கூறினார். அதற்காக ரூ.600-ஐ சண்முகத்திடம் கொடுத்தார்.

கடந்த 2-ந்தேதி சண்முகம், பழனிசாமியை தூக்கி சென்று அந்த கல் மாவு மில்லில் உள்ள ஒரு இருட்டறையில் போட்டார். மறுநாள் தவழ்ந்த படி வெளியே செல்ல முயன்ற பழனிசாமி முகத்தில் சண்முகம் கல்மாவு மூட்டையை தூக்கி போட்டார்.

மூச்சு திணறி பழனிசாமி இறந்தார். பின்னர் அந்த மில்லிலேயே காலியாக உள்ள ஒரு இடத்தில் குழித்தோண்டி அவரை புதைத்த சண்முகம் வழக்கம்போல தனது பணிகளில் ஈடுபட்டார். போலீசார் சண்முகத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று பழனிசாமியின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

முதியவரை கொன்று புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்,tamil news india news தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்,tamil news india news தந்தையை கருணை கொலை செய்து புதைத்த மகள்,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் மனைவி பேட்டி
கொள்ளையர்களை பிடிக்க அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் என மனைவி பானுரேகா கூறினார்.சென்னை கொளத்தூரில்  புதிய லட்சுமிபுரத்தில் முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில்  மேற்பகுதியில் துளையிட்டு நகைகள், ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு

மேலும்...

 கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை
உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடிதிருப்பூர்:திருப்பூர் மாவட்டம்

மேலும்...

 பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி
குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–சிக்பள்ளாப்பூர் மாவட்டம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in