tamilkurinji logo
 

தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது ,tamil news india news

tamil,news,india,news,


செய்திகள் >>> தமிழகம்

தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது

First Published : Monday , 20th March 2017 11:16:23 AM
Last Updated : Monday , 20th March 2017 11:16:23 AM


தனியாக நடந்து செல்லும்  பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட  சிறுவன் உள்பட 3 பேர் கைது ,tamil news india news

சாலையில் தனியாக நடந்து செல்லும் இளம் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


சென்னை அசோக் நகர் பகுதியில் இரவில் தனியாக சாலையில் நடந்து செல்லும் இளம் பெண்களை குறிவைத்து சிலர் வழிப்பறியில் ஈடுபடுவதாக அசோக் நகர் காவல் நிலையத்திறகு தொடர் புகார் வந்தது.


அதன்படி உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் புகார் வந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர்.


அப்போது மூன்று வாலிபர்கள் ஸ்கூட்டரில் வந்த பெண்களிடம் செல்போன் மற்றும் கை பைய் பறித்து செல்வது பதிவாகி இருந்தது.


முகம் தெளிவாக இல்லாததால் வழிப்பறிக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்த போது, நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சதீஷ் (26) என்பவருக்கு சொந்தமான என தெரியவந்தது.


இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சதீஷ் தனது நண்பர்களான ஜாபர்கான் பேட்டையை ேசர்ந்த அண்ணை சத்தியா நகரை சேர்ந்த முனியப்பன் (18), அதே பகுதியை சேர்ந்த தீவாகர் (17) ஆகியோருடன் சேர்ந்து இரவு 8 மணிக்கு மேல் தனியாக சாலையில் நடந்த செல்லும் இளம் பெண்களை குறிவைத்து செல்போன் மற்றும் கைபையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்து போலீசார், அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் பணம், 3 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.  Tags :  
தனியாக நடந்து செல்லும்  பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட  சிறுவன் உள்பட 3 பேர் கைது ,tamil news india news தனியாக நடந்து செல்லும்  பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட  சிறுவன் உள்பட 3 பேர் கைது ,tamil news india news தனியாக நடந்து செல்லும்  பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட  சிறுவன் உள்பட 3 பேர் கைது ,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர்வாரும் பணிகள் தொடக்கம்
சேலம் மாவட்டத்தில் கடந்த 83 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேட்டூர் அணையில் இன்று தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே நீர் நிலைகள் வறண்டு

மேலும்...

 மாமல்லபுரம் அருகே கார் எரிந்து பெண் உட்பட 3 பேர் பலி
மாமல்லபுரம் அருகே மர்மமான முறையில் கார் எரிந்ததில் மூவர் நேற்று இரவு உயிரிழந்தனர்.மாமல்லபுரம் - கல்பாக்கம் இடையே உள்ளது மனமை கிராமம். இங்கு ரியல் எஸ்டேட்டுக் காக ஒரு மனைப்பிரிவு உருவாக் கப்பட்டிருந்தது. இந்த மனைப் பிரிவில் நேற்று இரவு கார்

மேலும்...

 இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு
இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடைவிதித்து உள்ளதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. கட்சி தலைவர்கள் மத்திய அரசின் முடிவை கண்டித்துள்ளனர். நாடு முழுவதும் இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்க மாடுகளை

மேலும்...

 சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: இன்று வெளியாகிறது
சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 9-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ந்தேதி முடிவடைந்தது. இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 450 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.தேர்வு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in