tamilkurinji logo
 

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு,Tamil Nadu govt to begin smart card distribution from April 1

Tamil,Nadu,govt,to,begin,smart,card,distribution,from,April,1


செய்திகள் >>> தமிழகம்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு

First Published : Monday , 20th March 2017 10:17:36 AM
Last Updated : Monday , 20th March 2017 10:17:36 AM


தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு,Tamil Nadu govt to begin smart card distribution from April 1


 தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் முறைகேடுகளை தடுக்க பாயின்ட் ஆப் சேல் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.

இக்கருவிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டு, அதில் ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார், ரேஷன் கார்டு, செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இப்பணி தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 100 சதவீதம் முடிந்துள்ளது. மீதியுள்ள மாவட்டங்களில் 75 முதல் 85 சதவீதம் முடிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் பழைய ரேஷன் அட்டைகளுக்கு பதில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதற்கான பணி மும்பையில் நடைபெற்றது. இந்நிலையில் அச்சடிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது.

தொடர்ந்து வரும் 28, 29ம் தேதிகளில் 32 மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பின்னர், இந்த கார்டுகளை தாலுகா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

ஏப்ரல் 1ம் தேதி அன்று 4 அல்லது 5 ரேஷன் கடைகளை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே இடத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டும் வழங்கும் தேதி, இடம் விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும்போது விற்பனையாளர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது. அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டை வழங்கும்போது பழைய ரேஷன் கார்டில் கேன்சல் சீல் அடித்து அட்டைதாரர்களிடம் திருப்பி வழங்க வேண்டும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வந்தவுடன் விற்பனையாளர்கள் அதை பாயின்ட் ஆப் சேல் கருவியில் ஸ்கேன் செய்த பின்னர் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு,Tamil Nadu govt to begin smart card distribution from April 1 தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு,Tamil Nadu govt to begin smart card distribution from April 1 தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு,Tamil Nadu govt to begin smart card distribution from April 1
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு:மேலூர் விவசாயிகள் போராட்டம் வாபஸ்
மேலூர் பகுதி விவசாயத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் மதுரை - சென்னை நான்குவழிச்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மாற்றுப் பாதையில்

மேலும்...

 1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளார்.பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக

மேலும்...

 சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி
சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.  இந்த கார் 1993–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், பயன்படுத்தப்பட்ட பழைய வாகனம் என்றும், போலி ஆவணங்களை தயாரித்து, காரை இறக்குமதி செய்துள்ளார். இதன்மூலம் ரூ.1

மேலும்...

 தினகரனின் தங்கைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in