tamilkurinji logo


 

திருச்சி அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

tamil,news,,tamilseithigal,,,indiaseithigal,indianews,,tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள்,,தமிழ்,சினிமாசெய்திகள்




செய்திகள் >>> தமிழகம்

திருச்சி அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

First Published : Thursday , 7th December 2017 01:29:28 PM
Last Updated : Thursday , 7th December 2017 01:29:28 PM


திருச்சி அருகே  விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்


கன்னியாகுமரியிலிருந்து குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றவர்களின் சுற்றுலா வேன் திருச்சி அருகே நின்றிருந்த லாரிமீது பின்புறமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியானார்கள். காயத்துடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி நாகர்கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன்(44) இவர் குடும்பத்தாருடன் டெம்போ டிராவலர் வேனில் திருப்பதிக்கு சென்றார்.

வேனை டிரைவர் ராகேஷ்(33) ஓட்டினார். திருச்சி வழியாக வேன் வந்துக்கொண்டிருந்தது.

அதிகாலையில்  டெம்போ டிராவலர் துவரங்குறிச்சி காச மோர்னிமலை அருகில் சென்றபோது சாலையில்  நின்றிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த போர்வெல் லாரியை ஓட்டுநர் கவனிக்காததால் லாரியின்  பின்புறத்தில் டெம்போ டிராவலர் வேன் பயங்கரமாக மோதியது.

 இதில் டெம்போ டிராவலர் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் பயணம் செய்த அத்தனை பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை தீயணைப்புத்துறையினர், போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.


சாலையில் உரிய பாதுகாப்பு விளக்கு போடாமல் லாரியை நிறுத்தியிருந்ததும், ஓட்டுநர் ராகேஷ் வேகமாக வந்ததில் கவனிக்காமல் மோதியதும் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


திருச்சி அருகே  விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் திருச்சி அருகே  விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் திருச்சி அருகே  விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்
ஈரோடு அருகே அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஒருவர் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்துள்ளார். ஈரோடு அருகே கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் பாஷா - அஃப்ரோஸ் பேகம் தம்பதியினர். இவர்களின் மகன் முஹம்மது

மேலும்...

 தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை
 திருப்பத்தூா் அருகே தனியாக வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி ஒன்றியத்தைச் சோ்ந்த அச்சரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகு என்பவர்  மகள் அழகுதேவி(17). வாய் பேச முடியாத

மேலும்...

 சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி
சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கு: குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட  தூக்குதண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னை மாங்காட்டை அடுத்த மெளலிவாக்கம்

மேலும்...

 திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை
திருப்பூர் பாளையகாடு காயத்ரி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (52). தொழில் அதிபர். தனியாக நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் மொத்தமாக நூல்களை வாங்கி விற்பனை செய்தும் வந்தார்.இவருக்கு சிகப்பி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.நேற்று மதியம் தொழில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in