tamilkurinji logo
 

நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு,pongal-festival central government

pongal-festival,central,government


செய்திகள் >>> இந்தியா

நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு

First Published : Monday , 9th January 2017 07:02:42 PM
Last Updated : Monday , 9th January 2017 07:02:42 PM


நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு,pongal-festival central government

பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து நீக்கிய மத்திய அரசு, மத்திய அரசின் ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என அறிவித்துள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மத்திய அரசின் கட்டாய விடுப்புப் பட்டியலில் இருந்து வந்தது.


ஆனால், இன்று பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும் கூறியுள்ளது.

பொங்கல் திருநாளைக் கொண்டாடுபவர்கள் மட்டும் அந்த நாளில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மத்திய அரசு ஊழியர்கள் முன் அனுமதி பெற்றே பொங்கலுக்கு விடுமுறை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம், கோரிக்கை, வலியுறுத்தல் வலுப்பெற்று வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.


நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு,pongal-festival central government நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு,pongal-festival central government நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல: மத்திய அரசு அறிவிப்பு,pongal-festival central government
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பல் கைது
 தெலுங்கானா மாநிலத்தில் சில லட்சங்களுக்காக சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பலை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓமன் மற்றும் கத்தார் நாட்டு ஷேக்குகளுக்கு சிறுமிகள் விற்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக

மேலும்...

 மும்பையில் வரலாறு காணாத மழை:ரயில்,சாலைப் போக்குவரத்து முடங்கியது.
மும்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுகொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த

மேலும்...

 கோரக்பூர் மருத்துவமனையில் 3 நாட்களில் 61 குழந்தைகள் உயிரிழப்பு-மீண்டும் அதிர்ச்சி
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 60 குழந்தைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு

மேலும்...

 பன்றி காய்ச்சல் பாதிப்பில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி பலி
ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கீர்த்தி குமாரி பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, கீர்த்தி குமாரி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மேன் சிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின்னர் அங்கிருந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in