tamilkurinji logo
 

மருமகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மாமியார்,tamil news india news

tamil,news,india,news,


செய்திகள் >>> இந்தியா

மருமகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மாமியார்

First Published : Saturday , 18th March 2017 07:45:09 PM
Last Updated : Saturday , 18th March 2017 07:45:09 PM


மருமகளுக்கு விஷம் கொடுத்து  கொலை செய்த  மாமியார்,tamil news india news

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் பிங்கி. இவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லாததால் பிங்கியின் மாமியார் அவரை நீண்ட நாட்களாக கொடுமைப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், சம்பவ தினமான நேற்று பிங்கியின் மாமியார் அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.


மேலும், இறந்த பிங்கியின் உடலை போலீசாருக்குத் தெரியாமல் எரிக்க பிங்கியின் மாமியார்-கணவர் இருவரும் முயற்சி செய்துள்ளனர்.


இது குறித்து அக்கம்,பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுக்க விரைந்து வந்த போலீசார் பிங்கியின் மாமியாரைக் கைது செய்தனர். போலீசாரைக் கண்டதும் பிங்கியின் கணவர் தப்பி ஓடிவிட்டார்.


தனது மகளிடம் வரதட்சணை கேட்டதாகவும், ஆண் குழந்தை இல்லாததால் அவரை கொடுமைப்படுத்தியதாகவும் பிங்கியின் தந்தை ஜன்சத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


இதுதவிர தனது மகளை விஷம் கொடுத்துக் கொலை செய்து தனக்குத் தெரியாமல் அவரை எரிக்க முயன்றதாகவும் பிங்கியின் கணவர்-மாமியார் மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தப்பியோடிய பிங்கியின் கணவரை ஜன்பத் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மருமகளுக்கு விஷம் கொடுத்து  கொலை செய்த  மாமியார்,tamil news india news மருமகளுக்கு விஷம் கொடுத்து  கொலை செய்த  மாமியார்,tamil news india news மருமகளுக்கு விஷம் கொடுத்து  கொலை செய்த  மாமியார்,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பல் கைது
 தெலுங்கானா மாநிலத்தில் சில லட்சங்களுக்காக சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பலை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓமன் மற்றும் கத்தார் நாட்டு ஷேக்குகளுக்கு சிறுமிகள் விற்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக

மேலும்...

 மும்பையில் வரலாறு காணாத மழை:ரயில்,சாலைப் போக்குவரத்து முடங்கியது.
மும்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுகொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த

மேலும்...

 கோரக்பூர் மருத்துவமனையில் 3 நாட்களில் 61 குழந்தைகள் உயிரிழப்பு-மீண்டும் அதிர்ச்சி
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 60 குழந்தைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு

மேலும்...

 பன்றி காய்ச்சல் பாதிப்பில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி பலி
ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கீர்த்தி குமாரி பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, கீர்த்தி குமாரி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மேன் சிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின்னர் அங்கிருந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in