tamilkurinji logo
 

முதல்வர் நாராயணசாமி உத்தரவை ரத்து செய்த ஆளுநர் கிரண்பேடி,tamil news india news LG vs CM in Puducherry: Kiran Bedi cancels Narayanasamy’s order banning social media use for official work

tamil,news,india,news,LG,vs,CM,in,Puducherry:,Kiran,Bedi,cancels,Narayanasamy’s,order,banning,social,media,use,for,official,work


செய்திகள் >>> இந்தியா

முதல்வர் நாராயணசாமி உத்தரவை ரத்து செய்த ஆளுநர் கிரண்பேடி

First Published : Thursday , 5th January 2017 06:46:35 PM
Last Updated : Thursday , 5th January 2017 06:46:35 PM


முதல்வர் நாராயணசாமி உத்தரவை ரத்து செய்த ஆளுநர் கிரண்பேடி,tamil news india news LG vs CM in Puducherry: Kiran Bedi cancels Narayanasamy’s order banning social media use for official work

புதுச்சேரி அரசின் தொடர்புடைய கட்செவி அஞ்சல், கட்டுரைப் பதிவு (டிவிட்டர்), முகநூல் (பேஸ்புக்) சமூகவலைத் தளங்களில் இருந்து வெளியேற வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் பிறப்பித்திருந்த உத்தரவை, ரத்து செய்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொதுமக்கள் பிரச்னைகள், அரசு திட்டங்களை துரிதமாக செயல்படுத்த ஏதுவாக அனைத்து அரசு அதிகாரிகள் இடம் பெற்றிருந்த கட்செவி அஞ்சல் குழுவை நடத்தி வந்தார்.


இந்நிலையில் பிசிஎஸ் அதிகாரியும், கூட்டுறவு சங்கப் பதிவாளருமான சிவக்குமார் ஆபாசப்படம் பதிவிட்டதாகக் எழுந்த பிரச்னையை அடுத்து அவரை ஆளுநர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அனைத்து ஐஏஎஸ், பிசிஎஸ் அதிகாரிகளுக்கு பணியாளர் நலத்துறை மூலம் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் அரசு சார்புடைய கட்செவி அஞ்சல் குழுக்கள், கட்டுரை பதிவு (டிவிட்டர்), முகநூல் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அரசு அதிகாரிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது.


இதனால் அரசு ரகசியங்கள் வெளிநாடுகளுக்கு கசியும் வாய்ப்புள்ளது. எனவே அவற்றை பயன்படுத்தக்கூடாது என உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றால் தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவித்திருந்தார்.


இந்நிலையில் கட்செவி அஞ்சல், சமூக வலைதளங்களில் அரசு அதிகாரிகள் இடம் பெறுவதை தடை செய்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டு அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்து ஆளுநர் கிரண்பேடி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

புதுவை அரசு பணியாளர் நலத்துறை அனுப்பிய சுற்றறிக்கை, தற்போது பின்பற்றப்படும், வழிகாட்டுதல்கள், விதிகள், கொள்கைகளுக்கு முரணாக உள்ளதால் அது செல்லாது என அறிவிக்கப்படுகிறது.


இந்த அறிவிப்பு உடனே நடைமுறைக்கு வருகிறது என ஆளுநர் கிரண்பேடி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.



வளமான புதுச்சேரி என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால் தொலைதொடர்பில் சுணக்கமாக இருத்தல்கூடாது. அதனால் முதல்வரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என தனது கட்டுரை பதிவிலும் கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.


முதல்வர் நாராயணசாமி உத்தரவை ரத்து செய்த ஆளுநர் கிரண்பேடி,tamil news india news LG vs CM in Puducherry: Kiran Bedi cancels Narayanasamy’s order banning social media use for official work முதல்வர் நாராயணசாமி உத்தரவை ரத்து செய்த ஆளுநர் கிரண்பேடி,tamil news india news LG vs CM in Puducherry: Kiran Bedi cancels Narayanasamy’s order banning social media use for official work முதல்வர் நாராயணசாமி உத்தரவை ரத்து செய்த ஆளுநர் கிரண்பேடி,tamil news india news LG vs CM in Puducherry: Kiran Bedi cancels Narayanasamy’s order banning social media use for official work
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பல் கைது
 தெலுங்கானா மாநிலத்தில் சில லட்சங்களுக்காக சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பலை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓமன் மற்றும் கத்தார் நாட்டு ஷேக்குகளுக்கு சிறுமிகள் விற்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக

மேலும்...

 மும்பையில் வரலாறு காணாத மழை:ரயில்,சாலைப் போக்குவரத்து முடங்கியது.
மும்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுகொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த

மேலும்...

 கோரக்பூர் மருத்துவமனையில் 3 நாட்களில் 61 குழந்தைகள் உயிரிழப்பு-மீண்டும் அதிர்ச்சி
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 60 குழந்தைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு

மேலும்...

 பன்றி காய்ச்சல் பாதிப்பில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி பலி
ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கீர்த்தி குமாரி பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, கீர்த்தி குமாரி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மேன் சிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின்னர் அங்கிருந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in