tamilkurinji logo
 

ராஜஸ்தானில் இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற கொடூரம்,20-year-old girl gangraped in Jaipur, police yet to make arrests

20-year-old,girl,gangraped,in,Jaipur,,police,yet,to,make,arrests

செய்திகள் >>> இந்தியா

ராஜஸ்தானில் இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற கொடூரம்

First Published : Tuesday , 10th January 2017 06:54:47 PM
Last Updated : Tuesday , 10th January 2017 06:54:47 PM


ராஜஸ்தானில்  இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற  கொடூரம்,20-year-old girl gangraped in Jaipur, police yet to make arrests

உத்தரப்பிரதேசம் மாநிலம் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், தற்போது தனது தந்தையுடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஜகத்புராவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று, அந்தப் பெண் ஆழ்வர் மாவட்டத்தில் தேர்வு ஒன்று எழுதிவிட்டு ரெயில் மூலமாக ஜெய்ப்பூருக்கு திரும்பியுள்ளார். இரவு 7.30 மணி அளவில் ஜெய்ப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து வீடு திரும்ப முயற்சிக்கும் போது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வாகனத்தில் அப்பெண்ணை கடத்திச் சென்றனர்.
 
மேலும், கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து, ஜெய்பூரில் உள்ள மாளவியா தொழில்நுட்ப கல்லூரி அருகே நள்ளிரவு 11.30 மணி அளவில் அப்பெண்ணை வாகனத்திலிருந்து சாலையில் தள்ளிவிட்டுள்ளனர்.

மயங்கிய நிலையில் சாலையின் ஓரத்தில் பரிதாபமாக கிடந்த அப்பெண், இன்று அதிகாலை 5 மணிக்கு சுயநினைவு வந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பெண்ணை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான 4 பேரை வலை வீசித் தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் சம்மந்தப்பட்ட மர்ப நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.    Tags :    
ராஜஸ்தானில்  இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற  கொடூரம்,20-year-old girl gangraped in Jaipur, police yet to make arrests ராஜஸ்தானில்  இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற  கொடூரம்,20-year-old girl gangraped in Jaipur, police yet to make arrests ராஜஸ்தானில்  இளம்பெண்ணை கும்பலாக கற்பழித்து சாலையோரம் வீசிச் சென்ற  கொடூரம்,20-year-old girl gangraped in Jaipur, police yet to make arrests
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பாதுகாப்பிற்காக ஓடிய பெண் காவல் நிலையத்தில் சுட்டுக் கொலை
உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரியில் பாதுகாப்பிற்காக ஓடிய பெண் ஒருவர் காவல் நிலையத்திற்குள் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.மெயின்பூரியில் காவல் நிலையம் அருகே உள்ள மார்கெட் பகுதியில் நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், அவருடைய உறவினருக்கு இடையே சொத்து பிரச்சனை தொடர்பாக மோதல் ஏற்பட்டு

மேலும்...

 ரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் பலி
கொல்கத்தாவின் தும்தும் பகுதியை சேர்ந்த இளைஞர் தாராகாந்த் மாகால் தன்னுடைய நண்பர்கள் சுமித்குமார், சஞ்ஜீவ், காஜல் ஷாகா மற்றும் சந்தானுடன் தாராகேஷ்வர் கோவிலுக்கு சென்றுவிட்டு ரெயிலில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். ரெயிலில் சென்றபோது ரெயிலுக்கு வெளியே தொங்கிய வண்ணம் செல்ஃபி எடுக்கும்

மேலும்...

 வாயில் கறுப்புத்துணி கட்டி டெல்லியில் தமிழக விவசாயிகள் 17-வது நாளாக போராட்டம்
வாயில் கறுப்புத்துணியை கட்டிக்கொண்டு தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இருந்து பெருகும் ஆதரவால் 17 ஆம் நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து

மேலும்...

 பாதுகாப்பு படை வீரரின் 7 வயது மகன் கழுத்து அறுத்துக் கொலை
பீகார் மாநிலம் ஜெகன்னாபாத் மாவட்டம் நந்தன்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.பி.யாதவ். மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக யாதவ் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை இவரது 7 வயது மகன் அக்‌ஷய்குமாரை கடத்தி சென்ற சிலர், அவனது கழுத்தை பிளேடால் அறுத்துக்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in