tamilkurinji logo
 

வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; : டிடிவி தினகரன் ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; : டிடிவி தினகரன்

First Published : Thursday , 9th November 2017 06:28:53 PM
Last Updated : Thursday , 9th November 2017 06:28:53 PM


வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; : டிடிவி தினகரன் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், சசிகலாவின் உறவினர்கள் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று (நவ.9) காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில், இந்த சோதனைக்குப் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல் 150 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை அடையாறில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், பல்வேறு கேள்விகளுக்கும் பதில அளித்தார்.

ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் உள்ளிட்ட 10 குழுமங்கள், 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை: சென்னை,டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடக்கிறது

"எனது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. காலை 8.30 மணியளவில் அதிகாரி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால், அவரும் சற்று நேரத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். திரும்பி வரலாம், வராமலும் போகலாம்.

புதுச்சேரி அருகே ஆரோவில்லில் உள்ள எனது பண்ணை வீட்டில் இன்று காலை சில அதிகாரிகள் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர்  அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். எங்கள் வீட்டைக் கவனித்துக் கொள்ளும் இருவருமே படிப்பறிவில்லாதவர்கள். அதனால், அங்கு எனது வழக்கறிஞரை அனுப்பியிருந்தேன். ஒருவேளை அதிகாரிகளே அங்கு ஏதாவது ஆவணங்களை வைத்திருந்தாலும் அதையும் கண்டுபிடித்துவிடலாம். வீடு முழுவதும் கேமரா இருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

எனது ஆதரவாளர்கள் வீடுகளில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதன் பின்னணியில் மத்திய அரசே இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. யார் கொடுத்த தவறான தகவலின் பேரில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.

என்னுடன் நெருக்கமாக இருக்கிறார் என்பதற்காகவே புகழேந்தி வீட்டில் எல்லாம் சோதனை நடத்தி வருகின்றனர். இப்படி சோதனையில் ஈடுபடுபவர்கள், சேகர் ரெட்டி, அன்புநாதன் டைரியில் குறிப்பிட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் சொல்ல வேண்டும்.

வருமான வரிச் சோதனையில் ஈடுபட்டு எங்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். ஆனால், இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் அஞ்சிவிடமாட்டேன். எனக்கு 30 வயதாக இருக்கும் போதே நான், சசிகலா எனது தம்பி ஆகியோர் ஒரு வருடம் சிறையில் இருந்திருக்கிறோம். சிறை, சிபிஐ எல்லாம் எங்களுக்குப் புதிதல்ல.

என்னை எத்தனை வருடம் சிறையில் போட்டாலும், வெளியில் வந்த பிறகு, அதற்குக் காரணமான கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடாமல் செய்வேன். இருப்பது ஒரு உயிர்; அது ஒருமுறைதான் போகும். எனவே, ரெய்டுகளுக்கு எல்லாம் அஞ்சினால் வாழவே முடியாது.


நானும், சசிகலாவும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே, எங்களை ஒழித்துக்கட்டவே இத்தகைய ரெய்டு நடவடிக்கைகள் எல்லாம் நடத்தப்படுன்றன.

எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின்னர் இதேபோன்ற ரெய்டுகளால்தான் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. இப்போது 'அம்மா' மறைவுக்குப் பின் எங்களுக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது.

நாங்கள் துணிச்சலான, வீரமிக்க மண்ணில், குடும்பத்தில் பிறந்தவர்கள். அம்மாவையே பாதுகாத்தவர்கள். எங்களை அரசியலில் ஈடுபடாமல் செய்ய அரங்கேற்றப்படும் சதிகள் எடுபடாது. எங்களை சிறையில் அடைத்தாலும் வெளியில் வந்து பதிலடி கொடுப்போம். இப்போது எனக்கு 55 வயதாகிறது என்னை 20 வருடங்கள் சிறையில் அடைத்தாலும்கூட 75 வயதில் சிறையில் இருந்து வெளியே வந்து அரசியலில் எடுபடுவேன்.



வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; : டிடிவி தினகரன் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; : டிடிவி தினகரன் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; : டிடிவி தினகரன் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி
சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.  இந்த கார் 1993–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், பயன்படுத்தப்பட்ட பழைய வாகனம் என்றும், போலி ஆவணங்களை தயாரித்து, காரை இறக்குமதி செய்துள்ளார். இதன்மூலம் ரூ.1

மேலும்...

 தினகரனின் தங்கைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார்.

மேலும்...

 ஒருதலைக்காதல் சென்னையில் இளம்பெண் எரித்துக்கொலை
ஒருதலைக்காதலால் ஆதம்பாக்கத்தில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யபட்டார் தாய் சகோதரி உயிருக்கு போராடி வருகின்றனர்.ஆதம்பாக்கத்தை  சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ரேணுகா.  இவர்களுக்கு  2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். முத்த மகள் இந்துஜா (21), இந்துஜா பட்டதாரி பெண்.

மேலும்...

 குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலைசெய்த தந்தையின் தோழி
குன்றத்தூர் மூன்றாங்கட்டளை பகுதியில் வசிப்பவர் தர்மலிங்கம்(எ) சரவணன். வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும் , 4 வயதில் கோஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரஞ்சனி பிரிந்து சென்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in