tamilkurinji logo
 

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி ,tamil news ndia news

tamil,news,ndia,news,


செய்திகள் >>> தமிழகம்

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி

First Published : Thursday , 12th January 2017 09:01:13 AM
Last Updated : Thursday , 12th January 2017 09:01:13 AM


ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி ,tamil news ndia news


ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். திருச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரையில் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, மதுரை சட்டக் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கே.கே.நகர் ஆர்ச் அருகே மறியலில் ஈடுபட முயன்றனர்.


பின்னர் அவர்கள் ஊர்வலமாக பழைய ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்றடைந்தனர். அங்கு ஏற்கெனவே திரண்டிருந்த பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்தனர்.

தடுப்பு வேலிகளை மீறி மாணவர்கள் உள்ளே செல்ல முயன்றதையடுத்து மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின், சட்டக் கல்லூரி மூன்றாமாண்டு மாணவர் ராஜ்குமார் தலைமையில் 10 பேர் ஆட்சியரை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித் தனர்.

இதற்கிடையில் மாணவர்கள் தங்களை ஆட்சியர் நேரில் சந்திக்க மறுத்தார் எனக் கூறி கோரிப் பாளையத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் உட்பட 140 பேரை போலீஸார் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். மதுரையில் மாணவர்களின் ஊர்வலம், மறியலால் கோரிப் பாளையம், தல்லாகுளம், நீதிமன்றம், தமுக்கம் மைதானம், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவர் அமைப்பி னர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளைகள் வளர்ப்போர், பொது மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் என 2,500-க்கும் அதிகமானோர் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.


கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமெழுப்பிய மாணவர்கள், திடீரென ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களில் சிலர் திடீரென ஜல்லிக்கட்டுக் காளையை அங்கு ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மாணவர்கள் போராட் டத்தைக் கைவிட மறுத்து, ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர்.

இதையடுத்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அபிராமி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அபிராமி அலுவலகத்துக்குத் திரும்பிச் சென்றார். பேச்சுவார்த்தை நடத்திய காவல் துணை ஆணையர் மயில்வாகனன், போராட்டம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாநில, மத்திய அரசுகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததையடுத்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலைக் கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

ஆயிரக்கணக்கானோர் மறிய லில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகச் சாலையில் போக்கு வரத்து கடுமையாகப் பாதிக்கப் பட்டது. ஆட்சியர் அலுவலகச் சாலையில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.


ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் எதிரில் நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசுக்கும், விலங்குகள் நல உரிமை அமைப்பான ‘பீட்டா’வுக்கும் எதிராகவும் முழக்கமிட்டனர். தொடர்ந்து, தடையை மீறி பேரணியாகச் சென்றனர். இதேபோல, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி மன்னார்குடியில் சமூக வலைதள நண்பர்கள் 500 பேர் பேரணியாகச் சென்ற னர்.



  Tags :  
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி ,tamil news ndia news ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி ,tamil news ndia news ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி ,tamil news ndia news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர்வாரும் பணிகள் தொடக்கம்
சேலம் மாவட்டத்தில் கடந்த 83 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேட்டூர் அணையில் இன்று தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே நீர் நிலைகள் வறண்டு

மேலும்...

 மாமல்லபுரம் அருகே கார் எரிந்து பெண் உட்பட 3 பேர் பலி
மாமல்லபுரம் அருகே மர்மமான முறையில் கார் எரிந்ததில் மூவர் நேற்று இரவு உயிரிழந்தனர்.மாமல்லபுரம் - கல்பாக்கம் இடையே உள்ளது மனமை கிராமம். இங்கு ரியல் எஸ்டேட்டுக் காக ஒரு மனைப்பிரிவு உருவாக் கப்பட்டிருந்தது. இந்த மனைப் பிரிவில் நேற்று இரவு கார்

மேலும்...

 இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு
இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடைவிதித்து உள்ளதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. கட்சி தலைவர்கள் மத்திய அரசின் முடிவை கண்டித்துள்ளனர். நாடு முழுவதும் இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்க மாடுகளை

மேலும்...

 சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: இன்று வெளியாகிறது
சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 9-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ந்தேதி முடிவடைந்தது. இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 450 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.தேர்வு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in