tamilkurinji logo
 

இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் திருநங்கைகளுக்கான தனிப் பள்ளி திறப்பு,India’s first transgender school opens in Kerala

India’s,first,transgender,school,opens,in,Kerala

செய்திகள் >>> இந்தியா

இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் திருநங்கைகளுக்கான தனிப் பள்ளி திறப்பு

First Published : Wednesday , 4th January 2017 06:47:14 PM
Last Updated : Wednesday , 4th January 2017 06:47:14 PM


இந்தியாவில் முதன்முறையாக  கேரளாவில்   திருநங்கைகளுக்கான தனிப் பள்ளி திறப்பு,India’s first transgender school opens in Kerala

இந்தியாவில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான தொடங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளி கேரள மாநிலம் எர்னாகுளம் மாவட்டத்தின் திரிக்ககரா எனும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.


இந்த பள்ளிக்கு சஹாஜ் இண்டர்நேஷனல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பள்ளியை நடிகை கல்கி சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.


இந்தப் பள்ளியில் பயிலுபவர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக எழுத முடியும்.

தேசிய திறந்தநிலை கல்வி மையத்துடன் இந்தப் பள்ளி இணைந்து செயல்படும் எனவும், திருநங்கைகள் படிப்பை பாதியில் கைவிடுவதை குறைப்பதற்காக தொடங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


மேலும் இங்கு தையற்கலை, இயற்கை வேளாண்மை, ஆளுமைத் திறன் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் பேசிய கல்கி சுப்பிரமணியம் “ இந்நாள் என் வாழ்வில் சிறந்த நாள், இப்பள்ளி திருநங்கைகள் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.

கல்வியால் மட்டுமே திருநங்கைகள் வாழ்க்கையில் தன்னம்பிக்கை, அறிவு ஆகியவற்றை தர முடியும் என்பதால் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களிலும் இதேபோன்ற பல பள்ளிகளை தொடங்க முன்வர வேண்டும்’ எனக் கூறினார்.

 இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், திரிக்ககரா சட்டசபை உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.    Tags :    
இந்தியாவில் முதன்முறையாக  கேரளாவில்   திருநங்கைகளுக்கான தனிப் பள்ளி திறப்பு,India’s first transgender school opens in Kerala இந்தியாவில் முதன்முறையாக  கேரளாவில்   திருநங்கைகளுக்கான தனிப் பள்ளி திறப்பு,India’s first transgender school opens in Kerala இந்தியாவில் முதன்முறையாக  கேரளாவில்   திருநங்கைகளுக்கான தனிப் பள்ளி திறப்பு,India’s first transgender school opens in Kerala
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு ராணுவ வீரர்களுக்கு நவீன ஹெல்மெட்
இந்தியாவில் எல்லைப் பாதுகாப்பு படையினர், பாரா மிலிட்டரி படையினர், இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் என ராணுவத்தில் முக்கிய படைப்பிரிவினர் எதிரி நாடுகளின் தாக்குதல் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு

மேலும்...

 இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் - உளவுத்துறை
ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பணியில் மத்திய பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. பயங்கரவாத இயக்கங்களின் நகர்வை

மேலும்...

 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் கைது
பீகார் மாநிலம் ஜெகனாபாத் அருகே உள்ள அரசுப்பள்ளியில் படித்துவரும் 12 வயது சிறுமி பள்ளிக் கட்டிடத்தில் தனியாக இருக்கும் போது, அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் அச்சிறுமியை கட்டிடத்தின் மேல் பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்தச்

மேலும்...

 அகிலேசுக்கு சைக்கிள் சின்னத்தை வழங்கியது தேர்தல் ஆணையம்
உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. ஆளும் சமாஜ்வாடி கட்சியில், அதன் தலைவர் முலாயம்சிங்குக்கும், அவருடைய மகனும், முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. வேட்பாளர் தேர்வில் அகிலேஷ் யாதவின் விருப்பம் நிறைவேற்றப்படாததால், அவர் கடந்த 1–ந் தேதி, கட்சியின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in