tamilkurinji logo
 

இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில் கலகலப்பு,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில் கலகலப்பு

First Published : Friday , 16th June 2017 12:56:13 PM
Last Updated : Friday , 16th June 2017 12:56:13 PM


இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில்   கலகலப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இடிந்தகரை மீன்கள் ருசியாக இருக்கும் என்று ராதாபுரம் எம்எல்ஏ கூறியதால், அந்த மீன்களை சபாநாயகர் கேட்டதால் சட்டப்பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் உள்ளாட்சித்துறை மற்றும் மீன்வளத்துறை குறித்த மானியக்கோரிக்கை நடைபெற்றது. அப்போது, ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை பேசுகையில், நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் அவர் பேசுகையில், இடிந்தகரை மீன்கள் சுவையாக இருக்கும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், இடிந்தகரை மீன்களை எம்எல்ஏ-க்களுக்கு அளிக்கலாமே என்றதும் சட்டப்பேரவை கலகலப்புடன் காணப்பட்டது. உடனே எழுந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்வனத்துறை மானிய கோரிக்கையின்போது மீன்கள் வழங்கப்படும் என பதில் அளித்தார். மேலும், இடிந்தகரையில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

இதனிடையே, எம்எல்ஏ தங்கபாண்டியன் கேள்விக்குப் பதில் அளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராஜபாளையத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் நிதி ஆதாரம் பெற்று விரைவில் செயல்படுத்தப்படும் என்றும், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

மேலும், நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு படிப்படியாக பாதாள சாக்கடைகள் கட்டப்படும் என்று கூறிய அமைச்சர், பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கதவணைகளை கட்டும் பணி இந்தாண்டு தொடங்கப்படும் என்றார்.


இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில்   கலகலப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில்   கலகலப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில்   கலகலப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கன்னியாகுமரியில் வன்முறையை தூண்ட சதி செய்ததாக 7 மீனவர்கள் கைது
குமரி மாவட்டத்தில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதாக பச்சை தமிழகம் அமைப்பாளர் சுப. உதயகுமார், 17 பாதிரியார்கள் உட்பட 14,500 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வன்முறையை உருவாக்க சதி செய்ததாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 7

மேலும்...

 தாயை கொலை செய்து தப்பியோடிய குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது
சிறுமி ஹாசினியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் பெற்று வீட்டிலிருந்த தஷ்வந்த் கடந்த சனிக்கிழமை தனது தாயையும் அடித்துக் கொன்றார். பின்னர் நகைகளுடன் தலைமறைவான தஷ்வந்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச்

மேலும்...

 திருச்சி அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி
கன்னியாகுமரியிலிருந்து குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றவர்களின் சுற்றுலா வேன் திருச்சி அருகே நின்றிருந்த லாரிமீது பின்புறமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியானார்கள். காயத்துடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கன்னியாகுமரி நாகர்கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன்(44) இவர் குடும்பத்தாருடன் டெம்போ டிராவலர் வேனில்

மேலும்...

 ஆர்.கே.நகர் வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்
 ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி. மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே  7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை வரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in