tamilkurinji logo
 

கர்நாடக அதிகாரிகள் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்: சித்தராமையா ,Officials Working in Karnataka Must Learn Kannada: CM

Officials,Working,in,Karnataka,Must,Learn,Kannada:,CM

செய்திகள் >>> இந்தியா

கர்நாடக அதிகாரிகள் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்: சித்தராமையா

First Published : Saturday , 18th March 2017 07:37:50 PM
Last Updated : Saturday , 18th March 2017 07:37:50 PM


கர்நாடக அதிகாரிகள் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்: சித்தராமையா ,Officials Working in Karnataka Must Learn Kannada: CM


கர்நாடகா பொது நிறுவனங்கள் துறை செயலாளராக பணிபுரியும் ஸ்ரீவத்ச கிருஷ்ணா என்னும் ஐ.ஏ.எஸ் அதிகாரி, தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் தனக்கு மெயில் அனுப்பும்போது ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும் என கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கேள்விப்பட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவில் பணிபுரியும் அதிகாரிகள் கட்டாயமாக கன்னடம் கற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் “அந்த அதிகாரி குறித்து கேள்விப்பட்டேன். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பணிபுரியும் ஒவ்வொரு அதிகாரியும் கன்னட மொழியை கட்டாயம் கற்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து மாநில சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஜெயச்சந்திரா கூறுகையில் “கன்னட மொழிக்கு எதிராக எந்தவொரு அதிகாரியும் நடந்து கொள்வதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். இது தொடர்பாக கன்னட மொழி வளர்ச்சித் துறை அதிகாரியிடம் உடனடியாக பேசி அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்” என்றார்.



    Tags :    
கர்நாடக அதிகாரிகள் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்: சித்தராமையா ,Officials Working in Karnataka Must Learn Kannada: CM கர்நாடக அதிகாரிகள் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்: சித்தராமையா ,Officials Working in Karnataka Must Learn Kannada: CM கர்நாடக அதிகாரிகள் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்: சித்தராமையா ,Officials Working in Karnataka Must Learn Kannada: CM
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி
ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்தார் சிவசேனா கட்சி எம்.பி.யான ரவீந்திர  கெய்க்வாட். சிவசேனா எம்.பி. ரவீந்திரா கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் புனேவில் இருந்து டெல்லிக்கு  பயணம் செய்தார். அப்போது, விமானத்தினுள் அமரும் சீட் ஒதுக்கீடு காரணமாக பிரச்சினை

மேலும்...

 டெல்லியில் 4 வருடங்களாக அறைக்குள் பூட்டி கொண்டு இருந்த தாய் மற்றும் மகள்
டெல்லியில் 4 வருடங்களுக்கு முன் தங்களது வீட்டின் அறைக்குள் பூட்டி கொண்டு உள்ளே இருந்த மகள் மற்றும் தாயை டெல்லி போலீசார் மீட்டனர்.தென்மேற்கு டெல்லியில் மஹாவீர் என்கிளேவ் பகுதியில் வசித்து வந்த நபரொருவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.  அதனை தொடர்ந்து போலீசார்

மேலும்...

 சித்தா, ஆயுர்வேதா மருத்துவ முறைகளை ஒழுங்குப்படுத்த புதிய ஆணையம்-மத்திய அரசு முடிவு
சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக, புதிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் என்ற பெயரில், இந்த ஆணையம் அமைக்கப்பபட உள்ளது. சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகள்

மேலும்...

 தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,096.80 கோடி வழங்க மத்தியக்குழு பரிந்துரை
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,096 கோடி வழங்க மத்திய அரசுக்கு வறட்சி நிவாரணம் குறித்து ஆய்வு செய்த மத்திய குழு பரிந்துரை செய்து உள்ளது.தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி குறித்து மத்திய குழுக்கள் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி முதல் 25-ம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in