tamilkurinji logo
 

குடும்ப தகறாறில் 2 மகள்களை கொலை செய்து தந்தை தற்கொலை ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

குடும்ப தகறாறில் 2 மகள்களை கொலை செய்து தந்தை தற்கொலை

First Published : Friday , 16th June 2017 01:47:14 PM
Last Updated : Friday , 16th June 2017 01:47:14 PM


குடும்ப தகறாறில் 2 மகள்களை கொலை செய்து தந்தை தற்கொலை ,tamil news india news 
tamil seithigal india seithigal tamil cinema news

 கணவர், 2 மகள்களின் இறுதி சடங்கில்  பங்கேற்காத மனைவியை அப்பகுதி மக்கள் விரட்டியடித்தனர். சென்னை, மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்தவர் சங்கர் (38), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆஷா (32). இவர்களுக்கு கவிதாலயா (13), காவியா (10) ஆகிய இரண்டு மகள்கள்.

கடன் தொல்லை மற்றும் மனைவியுடன் பிரச்னை காரணமாக தன் 2 மகள்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் சங்கர். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், ஒரே வாகனத்தில் 3 சடலங்களையும் இறுதி ஊர்வலமாக கொண்டு சென்று, தகனம் செய்தனர்.

இறுதி ஊர்வலத்தில் தந்தையுடன், 2 மகள்களையும் சடலமாக கொண்டு சென்றதை பார்த்து அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. இதற்கிடையில், ஆஷாவுக்கு உறவினர்கள் பலமுறை போன் செய்தனர். ஆனால் சுவிட்ச் ஆப் என்று வந்தது. அவர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் அனைவரும் தவித்தனர். பின்னர், ஆஷா வருவதற்கு தாமதம் ஆனதால், சடலத்தை அடக்கம் செய்ய முடிவு செய்து, கொண்டு சென்றனர்.

இந்நிலையில், மகள்களுடன் தந்தை தற்கொலை என்ற செய்தி ஆஷாவுக்கு பத்திரிகைகள் மூலம் தெரியவந்தது. இதனால், பதறியடித்துக் கொண்டு அவர், மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்துக்கு நேற்று காலை சென்றார்.

நடந்த சம்பவத்தை கூறி, கணவன் வீட்டுக்கு செல்ல பயமாக இருக்கிறது. பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார். பின்னர், இதுபற்றி மணலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மணலி போலீசார், அங்கு சென்று ஆஷாவை அழைத்து கொண்டு, சிபிசிஎல் நகரில் உள்ள சங்கர் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது, ஆஷாவின் பெற்றோர், சகோதரர்களும் அங்கு வந்தனர். சங்கரின் உறவினர்கள், ஆஷாவை வீட்டுக்குள் சேர்க்கவில்லை. அவரது பெற்றோரும், எனக்கு இருந்த 2 பேத்திகளும், ஆஷாவால் இறந்தனர். அவர்களே போன பிறகு, எங்களுக்கு மகள் தேவையில்லை என கூறி, வீட்டுக்கு அழைத்து செல்ல மறுத்துவிட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

வீடு திரும்பி வந்த ஆஷா உறவினர்களிடம் கூறுகையில், ‘‘கணவருடன் சண்டை போட்டதால் தூக்க மாத்திரை சாப்பிட்டேன். அந்த மயக்கத்தில் கோயம்பேடு சென்று, அங்கிருந்து ஒரு பஸ்சில் ஏறினேன். அங்கு சென்று மயக்கம் தெளிந்த பிறகுதான் கோயம்புத்தூர் வந்தது தெரிந்தது.


பின்னர், அங்கிருந்து திரும்பி வந்தேன்’’என்றார். ஆனால், ஆஷா முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர் மீது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவரை வீட்டில் சேர்க்க அனைவரும் மறுத்துவிட்டனர்.  இதையடுத்து போலீசார், ஆஷாவை சென்னை மயிலாப்பூரில் உள்ள மகளிர் காப்பத்தில் ஒப்படைத்தனர்.

குடும்ப தகறாறில் 2 மகள்களை கொலை செய்து தந்தை தற்கொலை ,tamil news india news 
tamil seithigal india seithigal tamil cinema news

குடும்ப தகறாறில் 2 மகள்களை கொலை செய்து தந்தை தற்கொலை ,tamil news india news 
tamil seithigal india seithigal tamil cinema news

குடும்ப தகறாறில் 2 மகள்களை கொலை செய்து தந்தை தற்கொலை ,tamil news india news 
tamil seithigal india seithigal tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 எஸ்.எஸ்.எல்.சி ,பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
பிளஸ்2, பிளஸ்1, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணை விவரம்:தேர்வு அட்டவணைபிளஸ்2 பொது தேர்வுமார்ச் 1 : மொழிப்பாடம் முதல் தாள்02: மொழிப்பாடம் 2ம் தாள்05 ஆங்கிலம் முதல் தாள்06 மொழிப்பாடம் 2ம் தாள்09: வணிகவியல், ஹோம்

மேலும்...

 நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து

மேலும்...

 திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in