உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்: 800 அடி மலை உச்சியில் இருந்து விழுந்த ஜோடி மரணம்

அமெரிக்காவில் 800 அடி உயர மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து ஐடித்துறையில் பணியாற்றும் இந்திய தம்பதியர் உயிரிழந்த சம்பவத்துக்கு ‘செல்ஃபி’ மோகமே காரணம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐடி ஊழியர்களாக பணியாற்றி வந்த தம்பதி விஷு விஸ்வநாத் (வயது 29) மற்றும் மீனாட்சி மூர்த்தி (வயது 30) கேரள மாநிலம் செங்கனூரில் படிக்கும்போதே காதலித்த இவர்கள் பின்னர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் ஐடித்துறையில் வேலை கிடைத்து அங்கு சென்றனர். நியூயார்க்கில் பணியாற்றி வந்த இருவரும் சமீபத்தில் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகருக்கு இடம் மாறினர்.

சாகசப் பயணத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர்கள் விடுமுறை நாட்களில், தவறாமல் சுற்றுலா செல்வது வழக்கம். கடந்த வாரம் அவர்கள் கலிபோர்னியாவின் பிரபல சுற்றுலா ஸ்தலமான ‘யோசிமிட்டே தேசிய பூங்கா’ சென்றனர். அங்குள்ள 800 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர். பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் மரணத்துக்கு செல்ஃபி மோகமே காரணம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட டிவி சேனல்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘விஷுவின் சகோதரர் ஜிஸ்னு அளித்துள்ள பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். விஷு மற்றும் மீனாட்சி இருவருமே செல்ஃபி எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்கள் என்றும், மரணமடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக, அதே தேசிய பூங்காவில் வேறு இடங்களில் எடுத்த செல்பியை சமூகவளைதளங்களில் இருவரும் பதிவிட்டுள்ளதாக ஜிஸ்னு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மீனாட்சி செல்ஃபி எடுப்பதில் தீராத மோகம் கொண்டவர் என்றும் இதுதொடர்பாக பலமுறை அவரை தாம் எச்சரித்ததாகவும் ஜிஸ்னு கூறியுள்ளார். அந்த மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழக்கும் முன்பாக அதே பகுதியில் வேறு சில ஆபத்தான இடங்களில் மற்றவர்களுடன் இணைந்து மீனாட்சி செல்ஃபி எடுத்துள்ளார். சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள அந்த புகைப்படங்கள் இதனை உறுதிபடுத்தியுள்ளன.
இதனால் செல்ஃபி மோகத்தால் மீனாட்சியும், அவரது கணவர் விஷுவும் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க போலீஸார் கருதுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுபோலவே, அந்த ஆபத்தான பகுதியில் இருந்து இதுவரை 10க்கும் மேற்பட்டோர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், இவர்களில் பலர் செல்பி எடுக்க முயன்றபோது மரணமடைந்ததாகவும் தேசிய பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 800 அடி உயர மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து ஐடித்துறையில் பணியாற்றும் இந்திய தம்பதியர் உயிரிழந்த சம்பவத்துக்கு ‘செல்ஃபி’ மோகமே காரணம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐடி ஊழியர்களாக பணியாற்றி வந்த தம்பதி விஷு விஸ்வநாத் (வயது 29) மற்றும் மீனாட்சி மூர்த்தி (வயது 30) கேரள மாநிலம் செங்கனூரில் படிக்கும்போதே காதலித்த இவர்கள் பின்னர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் ஐடித்துறையில் வேலை கிடைத்து அங்கு சென்றனர். நியூயார்க்கில் பணியாற்றி வந்த இருவரும் சமீபத்தில் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகருக்கு இடம் மாறினர்.

சாகசப் பயணத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர்கள் விடுமுறை நாட்களில், தவறாமல் சுற்றுலா செல்வது வழக்கம். கடந்த வாரம் அவர்கள் கலிபோர்னியாவின் பிரபல சுற்றுலா ஸ்தலமான ‘யோசிமிட்டே தேசிய பூங்கா’ சென்றனர். அங்குள்ள 800 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர். பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் மரணத்துக்கு செல்ஃபி மோகமே காரணம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட டிவி சேனல்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘விஷுவின் சகோதரர் ஜிஸ்னு அளித்துள்ள பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். விஷு மற்றும் மீனாட்சி இருவருமே செல்ஃபி எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்கள் என்றும், மரணமடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக, அதே தேசிய பூங்காவில் வேறு இடங்களில் எடுத்த செல்பியை சமூகவளைதளங்களில் இருவரும் பதிவிட்டுள்ளதாக ஜிஸ்னு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மீனாட்சி செல்ஃபி எடுப்பதில் தீராத மோகம் கொண்டவர் என்றும் இதுதொடர்பாக பலமுறை அவரை தாம் எச்சரித்ததாகவும் ஜிஸ்னு கூறியுள்ளார். அந்த மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழக்கும் முன்பாக அதே பகுதியில் வேறு சில ஆபத்தான இடங்களில் மற்றவர்களுடன் இணைந்து மீனாட்சி செல்ஃபி எடுத்துள்ளார். சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள அந்த புகைப்படங்கள் இதனை உறுதிபடுத்தியுள்ளன.

இதனால் செல்ஃபி மோகத்தால் மீனாட்சியும், அவரது கணவர் விஷுவும் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க போலீஸார் கருதுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே, அந்த ஆபத்தான பகுதியில் இருந்து இதுவரை 10க்கும் மேற்பட்டோர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், இவர்களில் பலர் செல்பி எடுக்க முயன்றபோது மரணமடைந்ததாகவும் தேசிய பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://goo.gl/NvQnJ3

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்

10 Dec 2018

கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்

10 Dec 2018

பெண்கள் பாதுகாப்புக்காக \"181\" உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

01 Nov 2018

ஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்

01 Nov 2018

உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்: 800 அடி மலை உச்சியில் இருந்து விழுந்த ஜோடி மரணம்

31 Oct 2018

தாயை கொன்று குழந்தையையும் கொல்ல முயன்ற இளைஞர் கைது

31 Oct 2018

நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்- சென்னை வானிலை மையம்

25 Oct 2018

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

22 Oct 2018

சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி