கத்தியால் குத்தப்பட்ட கணவர் மரணம்- மனைவி, காதலன் கைது

கத்தியால் குத்தப்பட்ட கணவர் மரணம்- மனைவி, காதலன் கைது
திருவான்மியூரில் 2 நாட்களுக்கு தனது காதலன் மூலம் மனைவி நடத்திய கொள்ளை முயற்சி நாடகத்தில் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய இருந்த கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, நார்த்தாம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரவன் (30). மென்பொறியாளராக சென்னை தரமணியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும், தூத்துக்குடி விளாத்திகுளத்தைச் சேர்ந்த வினோதினி என்கிற அனிதா (25) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் சென்னை பல்லாவரம், தர்கா சாலையில் குடியேறினர். திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்ற நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று கணவருடன் அனிதா திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தார். அங்கு அவர்கள் தனியான ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாடினர்.

கணவர் கதிரவன் கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடியபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அனிதாவின் கணவரை அரிவாள் மற்றும் சுத்தியலால் தலையில் தாக்கி அனிதாவின் 12 சவரன் நகை மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றதாக அனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கதிரவனை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அனிதாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பதற்றமின்றி காணப்பட்டதும், செயற்கையாக அவரது அழுகை இருந்ததையும் போலீஸார் சந்தேகப்பட்டு விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

அப்போது அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் கைப்பற்றி அதை அனிதாவிடம் காட்டி விசாரணை நடத்தியபோது அவர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. கொலையாளியை பிடித்ததுபோன்று போலீஸார் அனிதாவிடம் பேசியபோது அவர் தடுமாறினார். விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவலைச் சொன்னார்.

திருமணத்துக்கு முன்பே தனக்கு காதலர் ஒருவர் இருந்ததாகவும், வீட்டில் சொல்ல தைரியம் இல்லாததால் கதிரவனை திருமணம் செய்துக்கொண்டதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் காதலனுடன் சேர்ந்து வாழ இவ்வாறு திட்டம் போட்டதாகவும், காதலனை வரவழைத்து அவர்மூலம் இவ்வாறு கொள்ளை சம்பவத்தை நடத்தியதாகவும் ஒப்புக்கொண்டார்.

தனது காதலனுடன் சேர்ந்து வாழ திட்டம்போட்டு கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியதும், கொள்ளை முயற்சி போல் கணவரை தாக்கி கொல்ல வேண்டும், அதன் பின்னர் கொள்ளை முயற்சியில் கொலை செய்யப்பட்டதுபோல் நாடகம் ஆடி காதலனுடன் சேர திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் கண்காணிப்பு கேமராவில் காதலன் உருவம் சிக்கியதால் குட்டு வெளிப்பட்டுவிட்டது என பதற்றப்பட்டதாகவும் அதை போலீஸார் சரியாக கண்டுபிடித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இளம்பெண் காதலனுடன் சேர கொலை முயற்சி வரை சென்றதும், காதலன் அதற்கு துணை நின்றதும் போலீஸாரை அதிர்ச்சி டைய வைத்தது. செல்போன் சிக்னலை வைத்து அனிதாவின் காதலனான மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவரான விளாத்திகுளம் குறுவார்பட்டியை சேர்ந்த அந்தோணி ஜெகன் (25) என்பவரை போலீஸார் மதுரையில் வைத்து கைது செய்தனர். பின்னர் இருவர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் அடையாறு தனியார் மருத்துவமனையில் கதிரவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

கணவர் கதிரவனை சில வாரங்களுக்கு முன் ஏற்காட்டில் வைத்து கொலை செய்ய அனிதா திட்டமிட்டதும் அது தோல்வியில் முடிந்ததால் தற்போது கொலைச் சமபவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது.
https://goo.gl/Kqhwd6


06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்