tamilkurinji logo
 

சமாஜ் வாடி கட்சி உடையும் என்ற கேள்விக்கே இடமில்லை -அகிலேஷ்தான் அடுத்த முதல்வர்:முலாயம்,No Question Of SP Split, Akhilesh Will Be CM After Elections, Says Mulayam Singh Yadav

No,Question,Of,SP,Split,,Akhilesh,Will,Be,CM,After,Elections,,Says,Mulayam,Singh,Yadav

செய்திகள் >>> இந்தியா

சமாஜ் வாடி கட்சி உடையும் என்ற கேள்விக்கே இடமில்லை -அகிலேஷ்தான் அடுத்த முதல்வர்:முலாயம்

First Published : Tuesday , 10th January 2017 07:09:40 PM
Last Updated : Tuesday , 10th January 2017 07:09:40 PM


சமாஜ் வாடி கட்சி உடையும் என்ற கேள்விக்கே இடமில்லை -அகிலேஷ்தான் அடுத்த முதல்வர்:முலாயம்,No Question Of SP Split, Akhilesh Will Be CM After Elections, Says Mulayam Singh Yadav

உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைவரான முலாயம் சிங்குக்கும், முதல்- மந்திரியான அகிலேசுக்கும் இடையே அதிகாரத்தை தக்க வைப் பதில் ஏற்பட்ட போட்டியால் இந்த பிளவு ஏற்பட்டது.

தந்தை-மகன் சண்டையில் அகிலேஷ் கை ஓங்கியுள்ளது. 99 சதவீத எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அகிலேசை ஆதரிக்கிறார்கள்.


இதனால் அதிர்ச்சி அடைந்த முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி கட்சியின்  சின்னமான சைக்கிள் சின்னத்தை தக்க வைத்துக் கொள்ள போராடினார். இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் விரைவில் தீர்ப்பு அளிக்க உள்ளது.

பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் அகிலேஷ் பக்கம் இருப்பதால் சைக்கிள்  சின்னம் அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதை உணர்ந்த முலாயம் சிங் யாதவ் பணிந்துள்ளார்.


நிருபர்களுக்கு பேட்டியளித்த முலாயம்சிங் யாதவ், ‘‘உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சி யைப் பிடித்தால், அகிலேஷ் முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்பார்’’ என்று முலாயம்சிங் அறிவித்துள்ளார்.

அகிலேசுக்கு ஆதரவாக உள்ள ராம்கோபால் யாதவை மட்டும் முலாயம் விமர்சித்து பேசினார். கட்சியில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் அகிலேஷ் பக்கம் இருப்பதால் முலாயம் சிங் மனதில் கடைசி நிமி டத்தில் மாற்றம் ஏற்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.

முலாயம் சிங் மனம் மாறியதால் அவர் மகன் அகிலேசிடமும் மனமாற்றம் ஏற்பட்டது. சமரசமாக செல்ல அவரும் விரும்புவதாகத் தெரிகிறது


.இதையடுத்து இன்று காலை முதல்-மந்திரி அகி லேஷ் திடீரென முலாயம் சிங் யாதவை சந்தித்துப் பேசினார். அவர்கள் இரு வரும் சுமார் 90 நிமிடங்கள்  மனம் விட்டுப் பேசினார்கள்.

இந்த் கூட்டத்தில் ஷிவபால் யாதவ், மற்றும் ராஜ்ய சபை எம்பி அமர சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முலாயம்  சிங் அகிலேஷ் யாதவிடம்  தேர்தல் ஆணையத்திடம், தனக்கு அகிலேஷ் யாதவ் தனக்கு 212 எம் எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கொடுத்த கடிதத்தை
 திரும்ப பெறுமாறு  கூறினார்.

மேலும் தேர்தலுக்கு பிறகு அகிலேஷ் யாதவை முதல் மந்திரியாக்குவதாக உறுதி அளித்துள்ளார்.எனினும் முலாயம் சிங் தொடரந்து கட்சி தலைவராக இருப்பார் என கூறப்படுகிறது.

ராம்கோபலை தனிமைப் படுத்தும் வகையில் முலாயம் பேசி இருப்பதாக தெரிகிறது. அதை அகிலேஷ் ஏற்பாரா என்று தெரியவில்லை. என்றாலும் சைக்கிள் சின்னம் முடங்கி விடக் கூடாது என்று இருதரப்பிலும் தீவிரமாக உள்ளனர்.


எனவே முலாயம்-அகிலேஷ் இடையே சமரசம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முலாயமை சந்தித்து விட்டு வெளியில் வந்த அகிலேசிடம் இது தொடர்பாக நிருபர்கள் கருத்துக் கேட்க முயன்றனர். ஆனால் அகிலேஷ் எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டார்.



    Tags :    
சமாஜ் வாடி கட்சி உடையும் என்ற கேள்விக்கே இடமில்லை -அகிலேஷ்தான் அடுத்த முதல்வர்:முலாயம்,No Question Of SP Split, Akhilesh Will Be CM After Elections, Says Mulayam Singh Yadav சமாஜ் வாடி கட்சி உடையும் என்ற கேள்விக்கே இடமில்லை -அகிலேஷ்தான் அடுத்த முதல்வர்:முலாயம்,No Question Of SP Split, Akhilesh Will Be CM After Elections, Says Mulayam Singh Yadav சமாஜ் வாடி கட்சி உடையும் என்ற கேள்விக்கே இடமில்லை -அகிலேஷ்தான் அடுத்த முதல்வர்:முலாயம்,No Question Of SP Split, Akhilesh Will Be CM After Elections, Says Mulayam Singh Yadav
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி
ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்தார் சிவசேனா கட்சி எம்.பி.யான ரவீந்திர  கெய்க்வாட். சிவசேனா எம்.பி. ரவீந்திரா கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் புனேவில் இருந்து டெல்லிக்கு  பயணம் செய்தார். அப்போது, விமானத்தினுள் அமரும் சீட் ஒதுக்கீடு காரணமாக பிரச்சினை

மேலும்...

 டெல்லியில் 4 வருடங்களாக அறைக்குள் பூட்டி கொண்டு இருந்த தாய் மற்றும் மகள்
டெல்லியில் 4 வருடங்களுக்கு முன் தங்களது வீட்டின் அறைக்குள் பூட்டி கொண்டு உள்ளே இருந்த மகள் மற்றும் தாயை டெல்லி போலீசார் மீட்டனர்.தென்மேற்கு டெல்லியில் மஹாவீர் என்கிளேவ் பகுதியில் வசித்து வந்த நபரொருவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.  அதனை தொடர்ந்து போலீசார்

மேலும்...

 சித்தா, ஆயுர்வேதா மருத்துவ முறைகளை ஒழுங்குப்படுத்த புதிய ஆணையம்-மத்திய அரசு முடிவு
சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக, புதிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் என்ற பெயரில், இந்த ஆணையம் அமைக்கப்பபட உள்ளது. சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகள்

மேலும்...

 தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,096.80 கோடி வழங்க மத்தியக்குழு பரிந்துரை
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,096 கோடி வழங்க மத்திய அரசுக்கு வறட்சி நிவாரணம் குறித்து ஆய்வு செய்த மத்திய குழு பரிந்துரை செய்து உள்ளது.தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி குறித்து மத்திய குழுக்கள் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி முதல் 25-ம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in