tamilkurinji logo
 

சிரியாவில் ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி பத்திரமாக மீட்பு,SevenSeven-year old gets rescued from Aleppo after tweeting about the war in Syria

SevenSeven-year,old,gets,rescued,from,Aleppo,after,tweeting,about,the,war,in,Syria

செய்திகள் >>> உலகம்

சிரியாவில் ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி பத்திரமாக மீட்பு

First Published : Tuesday , 20th December 2016 06:08:01 PM
Last Updated : Tuesday , 20th December 2016 06:08:01 PM


சிரியாவில்  ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி   பத்திரமாக மீட்பு,SevenSeven-year old gets rescued from Aleppo after tweeting about the war in Syria


சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி உள்நாட்டுப்போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிளிர்ச்சியாளர்கள் மற்றும் அதிபர் ஆதரவு படையினர் இடையே ஏற்பட்ட சண்டையில் இதுவரை லட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏழு வயது குழந்தையான பனா அலாபெத் தனது தாய் ஃபாத்திமா உதவியுடன் ட்வீட் செய்து அலெப்போ நகரில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். வார இறுதியில் அலெப்போ நகரை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட 2700 குழந்தைகளில் பனா அலாபெத் இடம் பெற்றிருக்கிறார்.

தனது தாயின் உதவியுடன் அலாபெத், அலெப்போவின் சூழ்நிலைகளை மிகவும் உருக்கமாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அலாபெத் மற்றும் அவரது தாயாரின் ட்விட்டரை சுமார் 211,000 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். தனது வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்டதையும் அலாபெத் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

தொடர்ந்து ட்வீட் செய்து வந்த அலாபெத் 24 மணி நேரத்திற்கு ட்வீட் செய்யாததை தொடர்ந்து அவரை பின் தொடர்பவர்கள் ட்விட்டரில் புதிய ஹேஷ் டேக் “WhereIsBana” ஒன்றை உருவாக்கி அதனை ட்ரெண்ட் செய்தனர்.

பின் அலாபெத் செய்த ட்வீட்டில் "தாக்குதலில் சிக்கியுள்ளோம், எங்கும் செல்ல இயலவில்லை, ஒவ்வொரு நிமிடமும் மரண பீதியை உணர்கிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். குட்பை – ஃபாத்திமா." என குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர் அப்பகுதியை சுற்றி வளைத்திருந்த அரசு படையினர் அப்பகுதியில் உள்ள பொது மக்களை வெளியேற்றினர். அதில் அலாபெத் குடும்பத்தினரும் இடம் பெற்றிருந்தனர்.



    Tags :    
சிரியாவில்  ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி   பத்திரமாக மீட்பு,SevenSeven-year old gets rescued from Aleppo after tweeting about the war in Syria சிரியாவில்  ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி   பத்திரமாக மீட்பு,SevenSeven-year old gets rescued from Aleppo after tweeting about the war in Syria சிரியாவில்  ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி   பத்திரமாக மீட்பு,SevenSeven-year old gets rescued from Aleppo after tweeting about the war in Syria
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இங்கிலாந்தில் 7 வயது சிறுமி கொலையில் 15 வயது சிறுமி மீது வழக்கு
இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷைர் நகர போலீசார் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.  அந்த சிறுமியின் பெயர் கேட்டீ ரஃப்.  பள்ளி சீருடை ஒன்றில் கரவொலி எழுப்பியபடி புன்னகையுடன் புகைப்படத்தில் சிறுமி காட்சியளிக்கிறார்.கேட்டீயை கொலை செய்த சந்தேகத்திற்குரிய சிறுமி 18 வயதிற்கு

மேலும்...

 ஜனநாயகத்தை பாதுகாக்கவேண்டும் நிறைவு உரையில்-ஒபாமா உருக்கம். மனைவிக்கு நன்றி தெரிவித்த ஒபாமா
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வருகிற 20-ந் தேதி பதவி ஏற்கிறார். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ஒபாமா தனது சொந்த ஊரான சிகாகோ நகரில் தனது ஆதரவாளர்கள்

மேலும்...

 மொபைல் போனில் கேம் விளையாடிய தாய் கண்முன்னே நீரில் மூழ்கி உயிர் இழந்த 4 வயது சிறுவன்
சீனாவில் 4 வயது சிறுவன் தனது தாய் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சியாங்யங்  நகரத்தில் உள்ள பிரபல ரிசார்ட்டிலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், நீச்சல் குளத்தில் நின்றுக்கொண்டு தாய் போனில்

மேலும்...

 15 இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கிறிஸ்த்துவ மத போதகர்
இத்தாலியில் உள்ள வெனிட்டோ  நகரில் உள்ள ஆண்ட்ரியா கண்டின் (வயது 48) என்பவர் கத்தோலிக்க பாதிரியாராக பொறுப்பு வகித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் பாதிரியார் மீது இரண்டு பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர்.அதில், பாதிரியார் ரகசியமாக விபச்சார தொழில் மூலம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in