tamilkurinji logo
 

சென்னையில் இன்று அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

சென்னையில் இன்று அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

First Published : Friday , 9th June 2017 07:27:53 PM
Last Updated : Friday , 9th June 2017 07:27:53 PM


சென்னையில் இன்று அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சென்னையில் இன்று அய்யாக்கண்ணு தலைமையில் நடத்திய விவசாயிகள் போராட்டத்தில் 32 மாவட்ட விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர். 32 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அய்யாக்கண்ணு கூறினார்.


தமிழ்நாட்டில் வறட்சி நிலவுவதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு டெல்லியில் ஏற்கனவே தொடர் போராட்டம் நடத்தினார்.

அதைத் தொடர்ந்து இப்போது 2-வது கட்டமாக சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஜட்டி, கோவணம் அணிந்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.

விவசாயிகள் இன்று தங்களது விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. எனவே அரசு தேவையான அரசாணையை வெளியிட வேண்டும்.

60 வயது முடிந்த விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறோம். இதற்கும் எந்த சாதகமான பதில் இதுவரை வரவில்லை.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்ட கடனுக்காக நகைகளை ஏலம் விட வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஏலத்தை அரசு தடுத்து நிறுத்த முன் வர வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அதையும் அரசு உடனே வழங்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் என்று காத்திருந்ததுதான் மிச்சம். இன்னும் கோரிக்கைகள் நிறைவேறவில்லை.

இதனால் இன்று மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளோம். 32 மாவட்ட விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அடுத்த மாதம் 10-ந்தேதி வரை 32 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கட்சி நிர்வாகிகளும் வந்து ஆர்ப்பாட்டத்தில் வாழ்த்தி பேசி விட்டு செல்கின்றனர்.


சென்னையில் இன்று அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
சென்னையில் இன்று அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
சென்னையில் இன்று அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 sample test
sample test

மேலும்...

 இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
கோவையை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26). பொக்லைன் ஆபரேட்டர்.இவரது மனைவி பாண்டியராணி(24). இவர்களுக்கு 2½ வயதில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பாண்டியராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு

மேலும்...

 மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை
சென்னை நெற்குன்றம், செல்லியம்மன் நகர், ஆடி வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (48), ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி மோகனா (40). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் கவுசல்யா (20), மகன்

மேலும்...

 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in