tamilkurinji logo
 

சென்னையில் வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரிக்கு கத்திக்குத்து ,tamil news india news

tamil,news,india,news,


செய்திகள் >>> தமிழகம்

சென்னையில் வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரிக்கு கத்திக்குத்து

First Published : Tuesday , 10th January 2017 11:14:12 AM
Last Updated : Tuesday , 10th January 2017 11:14:12 AM


சென்னையில் வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரிக்கு கத்திக்குத்து ,tamil news india news

சென்னையில் வணிகவரித்துறை அலுவலகத்தில் புகுந்து அதிகாரியை கத்தியால் குத்திவிட்டு மர்ம ஆசாமி ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் வணிக வரித்துறையின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு தெற்கு அமலாக்கப்பிரிவில் வணிகவரி அதிகாரியாக பணியாற்றுபவர் தங்கவேலு (வயது 56).


அங்குள்ள முதல்மாடியில் இவரது அலுவலகம் உள்ளது. நேற்று பகல் 12 மணி அளவில் அதிகாரி தங்கவேலு தனது அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவருடன் மர்மநபர் ஒருவர் பேசியபடி வந்தார்.

அதிகாரி தங்கவேலு தனது அலுவலகம் அருகே போகும்போது குறிப்பிட்ட நபர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு அதிகாரி தங்கவேலுவும் கோபமாக பதில் அளித்தார்.

திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆசாமி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அதிகாரி தங்கவேலுவை சராமரியாக குத்தினார்.


தங்கவேலுவின் முதுகு, வயிறு, மற்றும் மார்பு ஆகிய இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் தரையில் மயங்கி விழுந்தார்.

கத்தியால் குத்திய மர்ம ஆசாமி மின்னல்வேகத்தில் முதல்மாடியில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.


அலுவலகத்தில் இருந்த சக ஊழியர்கள் கூச்சல் போட்டனர். அதிகாரி தங்கவேலுவை ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்தசம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுப்பற்றி தகவல் கிடைத்த உடன் கமி‌ஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், கூடுதல் கமி‌ஷனர் சங்கர் மேற்பார்வையில், இணை கமி‌ஷனர் மனோகரன், துணை கமி‌ஷனர் பெருமாள், உதவி கமி‌ஷனர் தொல்காப்பியன் ஆகியோர் கத்திகுத்து நடந்த வணிகவரித்துறை தலைமை அலுவலகத்திற்கு நேரிடையாகச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக இணை கமி‌ஷனர் மனோகரன் கூறியதாவது:–

தாக்கப்பட்ட அதிகாரி தங்கவேலுவின் உயிருக்கு ஆபத்து இல்லை. அவரை தாக்கிய ஆசாமி யார் என்பது பற்றி அவருக்கு அடையாளம் தெரியும்.

 தப்பி ஓடிய குற்றவாளியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கத்தியால் குத்தப்பட்ட அதிகாரி தங்கவேலு சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் குடும்பத்துடன் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



  Tags :  
சென்னையில் வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரிக்கு கத்திக்குத்து ,tamil news india news சென்னையில் வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரிக்கு கத்திக்குத்து ,tamil news india news சென்னையில் வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரிக்கு கத்திக்குத்து ,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர்வாரும் பணிகள் தொடக்கம்
சேலம் மாவட்டத்தில் கடந்த 83 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேட்டூர் அணையில் இன்று தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே நீர் நிலைகள் வறண்டு

மேலும்...

 மாமல்லபுரம் அருகே கார் எரிந்து பெண் உட்பட 3 பேர் பலி
மாமல்லபுரம் அருகே மர்மமான முறையில் கார் எரிந்ததில் மூவர் நேற்று இரவு உயிரிழந்தனர்.மாமல்லபுரம் - கல்பாக்கம் இடையே உள்ளது மனமை கிராமம். இங்கு ரியல் எஸ்டேட்டுக் காக ஒரு மனைப்பிரிவு உருவாக் கப்பட்டிருந்தது. இந்த மனைப் பிரிவில் நேற்று இரவு கார்

மேலும்...

 இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு
இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடைவிதித்து உள்ளதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. கட்சி தலைவர்கள் மத்திய அரசின் முடிவை கண்டித்துள்ளனர். நாடு முழுவதும் இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்க மாடுகளை

மேலும்...

 சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: இன்று வெளியாகிறது
சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 9-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ந்தேதி முடிவடைந்தது. இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 450 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.தேர்வு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in