சென்னையில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்

சென்னையில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்

சென்னையில் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிப்பதில் பணி யாளர்கள் அலட்சியம் காட்டுவதால் சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று எழும் பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த மாதவரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமாரின் குழந்தைகள் தக்சன், தீக்சா ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதற்கு சென்னை மாநகராட்சியின் அலட்சியமும், முறையான வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்காததும், கண்காணிப்பு இல்லாததும்தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உலக சுகாதார நிறுவன வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முதலில் கொசு உற்பத்தி ஆதாரங் களை அழிக்க வேண்டும். அதன் பிறகு, நிலைமையின் தீவிரம் அறிந்து தேவைப்பட்டால் புகை மற்றும் தெளிப்பு மருந்துகளை அடிக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.


பொதுமக்கள், கள அதிகாரி களுக்கு புகார் தெரிவிக்கும்போது அது மாநகராட்சி தலைமையின் கவனத்துக்கு வருவதில்லை. மாநகராட்சி தலைமையும் கொசுத் தொல்லை குறித்து புகார்கள் குறைந்ததாக நம்புகிறது. அதே நேரத்தில் ‘1913’, ‘நம்ம சென்னை’ ஆகியவற்றில் புகார் தெரிவிக்கும் போது, அந்த விவரங்கள் தொகுக் கப்பட்டு, மாநகராட்சி ஆணை யருக்கு அனுப்பப்படுகிறது.

புகார் அதிகம் வந்த பகுதி குறித்து ஆணையர் கேள்வி எழுப்பு வார். இதைத் தவிர்ப்பதற்காகவே, மாநகராட்சி புகார் சேவைகளில் புகார் அளிக்க வேண்டாம் என்று கள அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

அவர்களிடம் புகார் அளித் தால், தெளிப்பு மருந்து மட்டும் தான் அடிக்கின்றனர். சென்னை யில் டெங்கு காய்ச்சல் அதிகரித் திருப்பதற்கு இதுவே முக்கிய காரணம் என்றார்.

பூச்சியியல் வல்லுநர்கள் உள்ளிட்ட கள அதிகாரிகள் சிலர் கூறும்போது, “கொசுவை ஒழிக்க முடியாது. பொதுமக்கள்தான் ஜன்னல் உள்ளிட்டவற்றுக்கு வலை கள் அடித்து பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு புகார் வந்தால் புகை மருந்து மட்டும்தான் அடிப்போம். மேலதி காரிகளுக்கு ஆதாரமாக புகைப் படம் எடுத்து அனுப்ப அதுதான் வசதியாகவும், நம்பும்படியாகவும் உள்ளது.

சில ஐஏஎஸ் அதிகாரிகள், மாநக ராட்சி ஆணையரைச் சந்தித்து, சென்னையில் அண்மைக் காலமாக கொசுப் புகை மருந்தையே பார்க்க முடியவில்லையே என்கின்றனர். அவர்களை திருப்திபடுத்தவும் புகை மருந்தைத்தான் அடிக்க வேண்டியுள்ளது” என்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படு வோரைக் குறைப்பது, உயிரிழப் பைத் தடுப்பது ஆகிய இரு இலக்கு களை நிர்ணயித்து மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி முழுவதும் தற்போது மலேரியா பணியாளர்கள் மட்டுமல்லாது, சாலை, பூங்கா உள்ளிட்ட அனைத் துத் துறை பணியாளர்களும் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து வீடுகளிலும் கொசு உற்பத்தி ஆதாரங்கள் உள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட வீட்டைச் சுற்றி யுள்ள 500 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், திரை யரங்கங்கள், வணிக வளாகங் களிலும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் காரணமாக பல வார்டுகளில் டெங்குக் காய்ச்சலே இல்லை. சில வார்டு களில் ஓரிருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநகராட்சி நடவடிக் கையால், டெங்கு பாதிப்பு கட்டுப் படுத்தப்படும் என்றனர்.
https://goo.gl/Tgaq5X


11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்

10 Dec 2018

கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்

10 Dec 2018

பெண்கள் பாதுகாப்புக்காக \"181\" உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

01 Nov 2018

ஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்

01 Nov 2018

உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்: 800 அடி மலை உச்சியில் இருந்து விழுந்த ஜோடி மரணம்

31 Oct 2018

தாயை கொன்று குழந்தையையும் கொல்ல முயன்ற இளைஞர் கைது

31 Oct 2018

நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்- சென்னை வானிலை மையம்

25 Oct 2018

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

22 Oct 2018

சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி