tamilkurinji logo
 

தனியார் மருத்தவமனையில் உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி மரணம்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

தனியார் மருத்தவமனையில் உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி மரணம்

First Published : Friday , 9th June 2017 08:04:29 PM
Last Updated : Friday , 9th June 2017 08:04:29 PM


தனியார் மருத்தவமனையில்  உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி மரணம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஈரோடு தனியார் மருத்தவமனையில்  60 கிலோ உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


சேலம் மாவட்டம் ஓமலூர் பச்சினம்பட்டியை சேர்ந்தவர் சக்தி. அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி மங்கையர்கரசி. கோர்ட்டில் கிளர்க்காக உள்ளார்.


இவர்களது ஒரே மகள் பாக்யஸ்ரீ (வயது 17). இவர் ஓமலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

பாக்யஸ்ரீயின் உடல் எடை 60 கிலோ இருந்தது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மாணவி முடிவெடுத்தார். இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.


பெற்றோரும் இதற்கு சம்மதித்தனர். அதன்படி அங்குள்ள மருத்தவமனைக்கு சென்று உடல் எடையை குறைப்பது குறித்து ஆலோசனை பெற்று வந்தார்.

இவரது உறவினர் ஒருவர் டாக்டராக உள்ளார். அவர் ஈரோடு மாவட்டம் கந்தசாமி பாளையம் பகுதியில் தனியாக மருத்தவமனை  நடத்தி வருகிறார்.

 மாணவி உடல் எடையை குறைக்க முயற்சித்த சம்பவம் தெரியவந்ததும் டாக்டர் மாணவியின் உடல் எடையை குறைப்பது குறித்து அவரது பெற்றோரிடம் பேசினார்.

மேலும் அவர் என்னிடம் வாருங்கள். உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை ஏற்படுத்தி ஒப்படைக்கிறேன் என்றார்.


இதை நம்பிய பெற்றோர் ஓமலூரில் இருந்து மகளை கந்தசாமிபாளையத்திற்கு அழைத்து வந்தனர். உறவினர் நடத்தி வரும் மருத்தவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர் சிகிச்சையை ஆரம்பித்தார். 9 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியதின்பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 9-வது நாளில் பாக்யஸ்ரீ திடீரென மயங்கினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து டாக்டரிடம் கேட்டனர். அவர் பெற்றோரிடம் விளக்கம் கூறி சமாளித்தார்.

இந்த நிலையில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சி நடக்க இருந்தது. இதை அறிந்த டாக்டர் நீங்கள் உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்லுங்கள். நான் இருக்கிறேன்.


நானும் உங்கள் உறவினர் தானே? நான் பாக்யஸ்ரீயை கவனிக்க மாட்டேனா என்று கூறினார். இதை நம்பிய பெற்றோர் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று பாக்யஸ்ரீயின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதை அறிந்த டாக்டர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பாக்யஸ்ரீயை கொண்டு சென்றார்.

மாணவியை பரிசோதனை செய்த டாக்டர் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து டாக்டர் மாணவியின் பெற்றோருக்கு தெரியப்படுத்தினார். உடனே ஆம்புலன்சில் மாணவியின் உடலை ஏற்றி அனுப்பி வைத்தார்.

ஓமலூர் பச்சினம்பட்டிக்கு சென்றதும் மாணவியின் உடல் இறக்கப்பட்டது. இறக்கப்பட்ட உடனே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். மகளின் சாவில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது உடலை பிரேத பரிசோதனை முடிவு செய்தனர்.

சேலம் மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்தால் சிகிச்சை அளித்த டாக்டர் இடையூறு செய்வார் என்று அஞ்சிய பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று முடிவுவெடுத்தனர்.

அதன்படி பாக்யஸ்ரீயின் உடல் கோவை அரசு மருத்தவமனைக்கு  கொண்டு வரப்பட்டது. இங்கு பாக்யஸ்ரீ உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இது குறித்து பாக்யஸ்ரீ பெற்றோர் கூறும்போது, 60 கிலோ என்பது சரியான உடல் எடைதான் என்று மகளிடம் கூறினோம். ஆனால் மகள் சற்று எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அதற்கான ஆலோசனை மட்டுமே பெற மருத்தவமனைக்கு  சென்றோம். அப்போது உறவினரான டாக்டர் குறுக்கிட்டு நான் சரி செய்து தருகிறேன் என்று கூறியதின் பேரில் நம்பி மகளை ஒப்படைத்தோம். மகளை 9 நாளில் சிகிச்சை என்ற பெயரில் கொன்று விட்டார்.

எனவே எனது மகளை கொன்ற டாக்டரை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர்.

இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாக்யஸ்ரீக்கு சிகிச்சை அளித்த மருத்தவமனை  மூடப்பட்டது.


தனியார் மருத்தவமனையில்  உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி மரணம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தனியார் மருத்தவமனையில்  உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி மரணம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தனியார் மருத்தவமனையில்  உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி மரணம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பதவிச் சண்டைக்குப் பெயர்தான் தர்மயுத்தமாம்: ஸ்டாலின்
அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இன்று இணைந்துள்ளன. அத்துடன், இரு தரப்பினரும் கட்சி மற்றும் ஆட்சி  அதிகாரங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.இந்த இணைப்பு குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-பதவிச் சண்டடைக்குப்

மேலும்...

 ஜெயலலிதாவின் ஆன்மா இரு அணிகளையும் இணைத்துள்ளது - எடப்பாடி பழனிச்சாமி
பரபரப்பான அரசியல் சூழலில் எதிரும் புதிருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்துள்ளன. அணிகள் இணையுமா என்ற பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே சுமார் 6 மாதங்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். கட்சி அலுவலகத்திற்கு வந்த பன்னீர்

மேலும்...

 ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தமிழகத்தின் துணை முதல் அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.தமிழக கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்ற  விழாவில், துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சராக மாபா பாண்டியராஜனும்

மேலும்...

 துணை முதலமைச்சராக ஓ.பி.எஸ் மாபா பாண்யராஜன் அமைச்சராக பதவியேற்பு
அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சராக மாபா பாண்டியராஜனும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள், நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று ஒன்றிணைந்தன. இணைப்புக்கு பின்னர், கட்சியை வழிநடத்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in