tamilkurinji logo
 

தி.நகரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை,tamil news india news

tamil,news,india,news,

செய்திகள் >>> தமிழகம்

தி.நகரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை

First Published : Tuesday , 10th January 2017 11:07:50 AM
Last Updated : Tuesday , 10th January 2017 11:07:50 AM


தி.நகரில் தொழிலதிபர்   வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை,tamil news india news

தொழிலதிபர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


சென்னை தி.நகர் பசுல்லா சாலையை ேசர்ந்த தொழிலதிபர் கைலாஷ் (58). இவர், எல்இடி பல்புகளை மொத்தமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வருகிறார்.

கைலாஷ் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றிருந்தார். பின்னர், நள்ளிரவில் அவர்கள் வீடு திரும்பியுள்ளார். 



அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு கைலாஷ் அதிர்ச்சியடைந்தார். ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என கருதி பதறிய அவர், உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

வீட்டில் அனைத்து பொருட்களும் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 100 சரவன் தங்க நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



அதன்படி, போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை புதிவு செய்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடமும், அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

கொள்ளை தொடர்பாக வழக்கு பதிவு செய்த ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும், கைலாஷ் வீட்டில் வேலை செய்த நபர்கள் மற்றும் அருகில் உள்ள நிறுவனங்களில் உள்ள காவலாளிகளிடம் தீவிர விசாரணை நடக்கிறது.


தொழிலதிபர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தி.நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொழிலதிபர் கைலாஷ் தனது புகாரில், வீட்டில்  பீரோவுக்கான சாவியை அப்படியே வைத்துவிட்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார். இதனால், வீட்டின்  நிலவரம் தெரிந்த நபர்கள்தான் வீட்டிற்கு வந்து கொள்ளை சம்பவத்தில்  ஈடுபட்டிருக்க முடியும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


மேலும், தொழிலதிபர் வீட்டிலும், வெளியிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசார் உடனடியாக கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவித்தனர்.



    Tags :    
தி.நகரில் தொழிலதிபர்   வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை,tamil news india news தி.நகரில் தொழிலதிபர்   வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை,tamil news india news தி.நகரில் தொழிலதிபர்   வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமான இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார்.  இதற்காக பிரதமர் மோடி, லக்னோவிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார் அவரை கவர்னரும் முதல்-அமைச்சர்

மேலும்...

 சென்னை மின்சார ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 3 வாலிபர்கள் தவறி விழுந்து பலி
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு விரைவு மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் எழும்பூர், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.சாதாரண மின்சார ரெயில்களை காட்டிலும் இதில் 30 நிமிடங்கள் பயண

மேலும்...

 கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் - 20 பேர் பலி
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றி காய்ச்சல் பாதிப்புடன் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் வரை பன்றி காய்ச்சலுக்கு 19 பேர் பலியாகி

மேலும்...

 மே 12-ல் பிளஸ் 2; எஸ்எஸ்எல்சிக்கு 19-ல் தேர்வு முடிவுகள் வெளியிட ஏற்பாடு
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 12-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மே 19-ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் அறிவித்தார். பொதுத்தேர்வுகள் தொடங்குவ தற்கு முன்பாகவே தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படுவது அரசு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in