tamilkurinji logo
 

நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி அலை தாக்கியது,New Zealand earthquake: Tsunami follows powerful tremor

New,Zealand,earthquake:,Tsunami,follows,powerful,tremor


செய்திகள் >>> உலகம்

நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி அலை தாக்கியது

First Published : Sunday , 13th November 2016 08:26:46 PM
Last Updated : Sunday , 13th November 2016 08:26:46 PM


நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி அலை தாக்கியது,New Zealand earthquake: Tsunami follows powerful tremor


நியூஸிலாந்தில் நள்ளிரவு நேரப்படி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 என்று பதிவான இந்த பூகம்பத்தின் தாக்கமாக முதல் சுனாமி அலை தெற்குத் தீவின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்கியது.

நாட்டின் ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரைப்பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் என்று நியூஸிலாந்தின் சிவில் டிபன்ஸ் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிமீ தூரத்திலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் தாக்கியது.

மேலும் நாடு முழுதுமே இதன் தாக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள சிறிய ஊரான செவியட்டில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது மேலும் பின்னதிர்வுகளும் ஏற்பட்டுள்ளது.

தெற்குத் தீவான வடக்கு கேண்டர்பரி பகுதியில் 1 மீட்டர் உயரத்திற்கு முதல் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.

கிறைஸ்ட் சர்ச் நகருக்கு 91 கிமீ வடகிழக்கே இதன் மையம் இருந்தது. உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

எலிசபத் என்ற பெண்மணி ரேடியோ நியூஸிலாந்துக்குக் கூறும்போது, தன் வீடு பாம்பு போல் சுழன்றது, சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மின்சாரம் இல்லை என்றார். வெலிங்டன் நகரில் சில கட்டிடங்களின் கண்ணாடிகள் சிதறி சாலையில் விழுந்துள்ளது.  பின்னதிர்வுகள் ரிக்டர் அளவு கோலில் 6.1 என்று பதிவாகியுள்ளது.

நியூஸிலாந்து நாடு ஆஸ்திரேலிய மற்றும் பசிபிக் டெக்டானிக் பிளேட்டுகள் மீது உள்ளது, இது ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளதால் ஆண்டுக்கு சுமார் 15,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.


நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி அலை தாக்கியது,New Zealand earthquake: Tsunami follows powerful tremor நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி அலை தாக்கியது,New Zealand earthquake: Tsunami follows powerful tremor நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி அலை தாக்கியது,New Zealand earthquake: Tsunami follows powerful tremor
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம்
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், புரட்சி படையினர் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும் இருக்கின்றன.இரு தரப்பினரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக

மேலும்...

 அட்லாண்டிக் பெருங்கடலில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.ஆப்பிரிக்க நாட்டின் கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 1600 கிலோமீட்டர் தூரத்திலும், பிரேசில் நாட்டு கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 2250 கிலோமீட்டர் தூரத்திலும், அட்லாண்டிக்

மேலும்...

 அமெரிக்க கேளிக்கை விடுதியில் தீவிரவாதி தாக்குதலில் 50 பேர் பலி
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஆர்லாண்டோ நகர கேளிக்கை விடுதியில் தற்கொலைப் படை தீவிரவாதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி யாகினர். 53 பேர் படுகாயம் அடைந்தனர்.ஆர்லாண்டோ நகரில் தன் பாலின உறவாளர்களுக்காக 'பல்ஸ் நைட் கிளப்' என்ற

மேலும்...

 ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 9 பேர் உயிரிழப்பு, 800-க்கும் மேற்பட்டோர் காயம்
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். 650-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கயூஷ் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 9.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in