tamilkurinji logo
 

மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிகிறது: மீன் விலை குறையும் என எதிர்பார்ப்பு,Tamil Nadu's fishing ban ends today tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Tamil,Nadu's,fishing,ban,ends,today,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிகிறது: மீன் விலை குறையும் என எதிர்பார்ப்பு

First Published : Wednesday , 14th June 2017 12:55:43 PM
Last Updated : Wednesday , 14th June 2017 12:55:43 PM


மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிகிறது: மீன் விலை குறையும் என எதிர்பார்ப்பு,Tamil Nadu's fishing ban ends today tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

வங்கக்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக ஆண்டுதோறும் தமிழக கடலோர மாவட்டங்களில் 45 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கியது.

இது மே 29-ந் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் கப்பல் மோதிய விபத்தால் கடலில் எண்ணெய் படலம் பரவியது மற்றும் பண மதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால் சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் வழக்கமாக ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்வது வழக்கம். அங்கு தடை உத்தரவு அமலில் உள்ளபோது மீன் பிடிக்க சென்றால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்பதால் இந்த முடிவை எடுத்தனர்.

இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து சென்னை காசிமேடு துறைமுகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தயார் ஆகி வருகிறார்கள்.

விசைப்படகுகளில் ஐஸ் கட்டிகள், டீசல், உணவுப் பொருட்கள், குடிநீர், வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இன்று இரவு அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கிறார்கள். ஒரு வாரத்துக்கு பின்னரே அவர்கள் கரை திரும்புவார்கள். எனவே மீன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடை காலத்துக்கு பிறகு கடலுக்குள் செல்லும் போது பெரிய வகை மீன்கள் அதிக அளவில் சிக்கும் என்பதால் மீனவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.





  Tags :  
மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிகிறது: மீன் விலை குறையும் என எதிர்பார்ப்பு,Tamil Nadu's fishing ban ends today tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிகிறது: மீன் விலை குறையும் என எதிர்பார்ப்பு,Tamil Nadu's fishing ban ends today tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிகிறது: மீன் விலை குறையும் என எதிர்பார்ப்பு,Tamil Nadu's fishing ban ends today tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in