tamilkurinji logo
 

வளர்ப்பு மகளை கொலை செய்த தந்தை கைது,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

வளர்ப்பு மகளை கொலை செய்த தந்தை கைது

First Published : Friday , 9th June 2017 08:07:14 PM
Last Updated : Friday , 9th June 2017 08:07:14 PM


வளர்ப்பு மகளை கொலை செய்த  தந்தை கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சிந்தாதிரிப்பேட்டை சாமிக்கண்ணு தெருவை சேர்ந்தவர் ஜெரால்டு (40). இவரது மனைவி சங்கீதா. தம்பதிக்கு குழந்தை இல்லாததால், ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.


இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் இருந்து மிருதுலா என்ற 4 வயது சிறுமியை தம்பதி தத்தெடுத்தனர்.

 கடந்தாண்டு ஜூலை மாதம் 7ம் தேதி, மிருதுலா பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக ஜெரால்டு குழந்தையை நுங்கம்பாக்கம் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.


மேலும், இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். இதற்கிடையே, மிருதுலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 பின்னர், இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை உடலில் காயங்கள் உள்ளதால், குழந்தை கொலை செய்யப்பட்டு இருக்கலாம், என்று அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் இந்த வழக்கை நேற்று முன்தினம் கொலை வழக்காக பதிவு செய்து, ஜெரால்டை கைது செய்தனர். இதுதொடர்பாக, அவரது மனைவி சங்கீதாவிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை கொலை வழக்கில் ஓராண்டுக்கு பின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  Tags :  
வளர்ப்பு மகளை கொலை செய்த  தந்தை கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
வளர்ப்பு மகளை கொலை செய்த  தந்தை கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
வளர்ப்பு மகளை கொலை செய்த  தந்தை கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலை உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்னார்.பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 27ந்தேதி தொடங்கும். என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.  பொறியியல் படிப்பில் சேருவதற்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள்

மேலும்...

 சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாட்டில் 400 கிலோ நகையுடன் 2 பெட்டகங்கள் மீட்பு
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டடம் முழுவதும் சேதம் அடைந்ததால், கட்டடத்தை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி, அந்த கட்டடத்தை தனியார் நிறுவனம் மூலம்

மேலும்...

 தலைமறைவு வாழ்க்கை - செல்போன் சிக்னலால் சிக்கிய நீதிபதி கர்ணன்
தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணனை போலீஸார் கைது செய்து கொல்கத்தா சிறையில் அடைத்தனர்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல் வேறு நீதிபதிகள் மீது நீதிபதி கர்ணன் ஊழல் புகார் கூறினார். இந்த விவகாரம்

மேலும்...

 ஜனாதிபதி தேர்தல்: எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி முடிவதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 17-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.ஆளும் பா.ஜ.க. சார்பில் இந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நாளை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in