tamilkurinji logo


 

“எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி கேள்வி,Kerala inter-faith couple recieve death threats for marriage

Kerala,inter-faith,couple,recieve,death,threats,for,marriage,




செய்திகள் >>> இந்தியா

“எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி கேள்வி

First Published : Thursday , 19th July 2018 07:24:15 PM
Last Updated : Thursday , 19th July 2018 07:24:15 PM


“எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி கேள்வி,Kerala inter-faith couple recieve death threats for marriage

கேரளாவில் புதியதாக கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதி, அடிப்படைவாத கும்பலிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் தெரிவித்துள்ளார்கள்.

கொலை மிரட்டல் விடுப்பது தொடர்பாக அவர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளம் மூலம் வைரலாக பரவுகிறது, இதன் மூலமே இச்சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.

கேரளாவில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஹிரிசனுக்கும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சஹானாவிற்கும் கடந்த திங்களன்று திருமணம் நடந்தது. இப்போது அவர்கள், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட  அமைப்புகளிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்கள்.

ஹரிசன் பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள வீடியோ செய்தியில், “இரண்டு நாட்களுக்கு முன்னதாக நாங்கள் திருமணம் செய்துக் கொண்டோம், திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்தேன். அதனையடுத்து எங்களுக்கு அதிகமான கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எஸ்டிபிஐ அமைப்பும் எங்களுக்கு மிரட்டல் விடுக்கிறது.

எங்களை கொன்றுவிடோம் என அவர்கள் மிரட்டுகிறார்கள், என்னுடைய பெற்றோர்களையும் என்னால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. எங்களுடன் என்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள். எங்களால் காவல் நிலையமும் செல்ல முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை,” என பேசியுள்ளார்.
 
சஹானா பேசுகையில், “எங்களுடைய உறவு மற்றும் திருமணத்தின் போதும் நாங்கள் மதம் மற்றும் ஜாதி பற்றி எதுவும் நினைத்தது கிடையாது. இப்போது என்னுடைய குடும்பத்தார் எங்களையும், என்னுடைய கணவர் குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்.

நான் ஒரு இஸ்லாமியர், என்னுடைய கணவர் கிறிஸ்தவர், நாங்கள் இருவரும் மதற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஒருவருக்கு ஒருவர் வலியுறுத்தவில்லை. நான் என்னுடைய கணவருடன் வாழ வேண்டும், உயிரிழக்க விரும்பவில்லை. எங்களை கொலை செய்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது?” என கேள்வியை எழுப்பியுள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் காதல் திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கெவின் ஜோசப், மணப்பெண்ணின் உறவினர்களால் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

21 வயதான கெவின் கொலை செய்யப்பட்டதை குறிப்பிட்டு பேசும் ஹரிசன், “கெவின் ஜோசப் போன்று ஒரு செய்தித்தாள் செய்தியாக என்னுடைய வாழ்க்கை முடிந்துப் போவதை நான் விரும்பவில்லை,” என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

“எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி கேள்வி,Kerala inter-faith couple recieve death threats for marriage “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி கேள்வி,Kerala inter-faith couple recieve death threats for marriage “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி கேள்வி,Kerala inter-faith couple recieve death threats for marriage
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா
கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை மிக பலத்த மழை பெய்தது. இந்த 10 நாட்களாக நடந்த இயற்கையின் கோர தாண்டவத்தால் விடாது மழை பெய்தது.தொடர் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. தாழ்வான

மேலும்...

 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு

மேலும்...

 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in