144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நாளை தொடக்கம்

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நாளை தொடக்கம்
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை தொடங்குகிறது.

தாமிரபரணி சமவெளியில் தொடங்கும் பாபநாசம் முதல் கடலில்சேரும் குன்னக்காயல் வரையிலான 185 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 144 படித்துறைகளிலும் அதிகாலையிலேயே விழா தொடங்குகிறது.

குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்வதையொட்டி தாமிரபரணி புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது.

27-ம் தேதி வரை விழா நடைபெறுவதால் தாமிரபரணியில் நீராட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் துறவிகள், மடாதிபதிகள் நெல்லைக்கு செல்கின்றனர்.

ஆயிரக்கணக்கானோர் வருவதால் மகாபுஷ்கர விழாவிற்கு 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புஷ்கர விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை பாபநாசம் செல்கிறார்.

விழாவையொட்டி சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
https://goo.gl/9pqBRh






14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்

10 Dec 2018

கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்