tamilkurinji logo
 

5 மாநில தேர்தல்களில் பாஜகவை எதிர்க்கும் சிவசேனா,Shiv Sena sharpens attack on Centre, says "worst in 10,000 years

Shiv,Sena,sharpens,attack,on,Centre,,says,"worst,in,10,000,years,


செய்திகள் >>> இந்தியா

5 மாநில தேர்தல்களில் பாஜகவை எதிர்க்கும் சிவசேனா

First Published : Friday , 6th January 2017 07:10:04 PM
Last Updated : Friday , 6th January 2017 07:10:04 PM


5 மாநில தேர்தல்களில் பாஜகவை எதிர்க்கும் சிவசேனா,Shiv Sena sharpens attack on Centre, says


பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவை எதிர்த்து சிவசேனா போட்டியிடுகிறது. உ.பி.யில் மட்டும் அதிகப்படியாக 150 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டுள்ள சிவசேனா, மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. என்றாலும் மகராஷ்டிரா உட்பட பல்வேறு மாநில தேர்தல்களில் சிவசேனா தனித்தே போட்டியிட்டது. இந்த வகையில் அந்தக் கட்சி கடைசியாக பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 150 தொகுதிகளில் போட்டியிட்டது. இங்கு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததுடன் தனது வேட்பாளர்களின் டெபாசிட் தொகையையும் இழந்தது. என்றாலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநில தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடப் போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்தவரும் மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சருமான ஆனந்த் கீதே கூறும்போது, "5 மாநில தேர்தல்களில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டு சேர முடிந்தால், அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். யாருடனும் சேர முடியாவிட்டால் தனித்தே போட்டியிடுவோம்” என்றார்.

உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 150-ல் சிவசேனா போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இங்கு பாஜக முக்கிய போட்டியாளராக விளங்கும் நிலையில், அதன் சில நூறு வாக்குகளையே சிவசேனா பிரிக்கும் வாய்ப்புள்ளது. இதையே தான் பிஹாரிலும் அக்கட்சி செய்தது. உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகியவற்றிலும் சிவசேனாவுக்கு பெரிய அளவில்வாக்குகள் இல்லை.

கோவா தவிர மற்ற நான்கு மாநிலங்களில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கவும் இதுவரை எந்தக் கட்சியும் முன்வரவில்லை.

கோவாவில், பாஜகவின் தாய் கழகமான ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து பிரிந்த சுபாஷ் விளிங்கர் என்பவர் ‘சுரக் ஷா மன்ச்’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியுள்ளார்.

இக்கட்சியுடன் சேர்ந்து போட்டியிட சிவசேனா பேச்சு நடத்தி வருகிறது. கோவாவில் மராத்தி மொழி பேசுவோர் கணிசமாக இருப்பதால், இங்கு சிவசேனா முதல்முறையாக தற்போது ஒரு தொகுதியையாவது வெல்லும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, முன்கூட்டியே பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல் செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வரிசையில் சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

5 மாநில தேர்தலுக்குப் பின் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய வலியுறுத்தி தனது கட்சி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரை சந்திப்பார்கள் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

5 மாநில தேர்தல்களில் பாஜகவை எதிர்க்கும் சிவசேனா,Shiv Sena sharpens attack on Centre, says 5 மாநில தேர்தல்களில் பாஜகவை எதிர்க்கும் சிவசேனா,Shiv Sena sharpens attack on Centre, says 5 மாநில தேர்தல்களில் பாஜகவை எதிர்க்கும் சிவசேனா,Shiv Sena sharpens attack on Centre, says
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 போலீஸ் மீது மிளகாய் பொடியை தூவி கொலை குற்றவாளியை மீட்டுச் சென்ற கூட்டாளிகள்
டெல்லியில், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, போலீஸார் கண்களில் மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தி அந்த நபரை கூட்டாளிகள் மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஹரியாணா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். கிழக்கு

மேலும்...

 நீரவ் மோடியை போல இன்னொரு தொழிலதிபர் 5 வங்கியில் 800 கோடி மோசடி
மேலும் ஒரு தொழில் அதிபர் வங்கிகளில் ரூ.800 கோடி மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பி ஓடிவிட்டார்.மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் சில அதிகாரிகள் துணையுடன் வங்கி உத்தரவாத கடிதத்தை போலியாக பெற்று சர்வதேச

மேலும்...

 3வது திருமணம் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான்.  கடந்த 1992ம் ஆண்டு உலக கோப்பையை இவரது

மேலும்...

 காதல் திருமணம் செய்த இளம் பெண் வங்காளத்தில் மர்மமான முறையில் மரணம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் பூர்ணாதேவி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த ரிமுஷேக்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in